Header Ads



அரசாங்கத்திலிருந்து வெளியேறும் 10 பேர் - மவ்பிம வெளியிட்ட தகவல்


இணக்க அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் பூர்த்தியானதன் பின்னர், அதிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் கலந்துரையாடி வருவதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  15 பாராளுமன்ற உறுப்பினர்களே அவ்வாறு வெளியேறத் தயாராகவுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, டி.பி.ஏக்கநாயக்க, நிமல் லன்சா, அருந்திக பெர்னாண்டோ, லக்ஸ்மன் வசந்த பெரேரா, நிசாந்த முத்துஹெட்டிகம, சுசந்த புஞ்சிநிலமே, டுலிப் விஜயசேகர, சுமேதா ஜயசேன, தாராநாத் பஸ்நாயக்க, இந்திக்க பண்டாரநாயக்க, பிரியங்கர ஜயரத்ன மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரின் பெயர்கள் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுபற்றி டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது,

அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளதால் எமது கட்சி வலுவிழக்கின்றதே ஒழிய வலுப்பெறவில்லை என நான் தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி ஒப்பந்தம் முடிவடையும் வரை இணைந்திருக்குமாறு அவர் கூறினார். அது தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொண்டு ஆராய்ந்து வருகின்றோம்.
என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.