Header Ads



ஈரான் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற IS தீவிரவாதிகள்

ஈரான் நாட்டில் இன்று நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச்சூடு தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் வளாகத்தினுள் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டார். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரை காலை முதல் பணயக்கைதியாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர். இந்தப் பணயக்கைதிகளில் ஈரான் நாடாளுமன்ற எம்.பி.-க்களும் அடங்குவர்.

இதைத்தொடர்ந்து ஈரானில், தெஹ்ரான் நகரில் உள்ள மசூதி ஒன்றிலும் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

மேலும், ஈரானில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிலும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் என ஈரான் உள்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. ஈரானில் ரமலான் மாதம் தொடங்கியதிலிருந்து பல்வேறு கட்டத் தாக்குதல்களில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது

1 comment:

  1. Killing civilians done by any group (ISIS in world) or any states (IRAN in siriya) highly unacceptable.

    ReplyDelete

Powered by Blogger.