Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக சூனியம்..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக நம்பப்படும் செப்பு தகடுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கெபத்திகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள கல்லறையில் இருந்து இந்த தகடுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் சகோதரர் மூவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மகன் ஒருவருக்கு எதிராக இவ்வாறு சூனியம் செய்ததாக நம்பப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹேதுஹாமிகே நந்தசேன, வட மத்திய மாகாண அமைச்சர் சுசில் குணரத்ன, அவரது மகன் துசித குணரத்ன, ஸ்ரீலங்கா சுதந்தி்ர கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் சகோதரர்களான கவின் திஸாநாயக்க, அமில் திஸாநாயக்க மற்றும் ரவிந்திர திஸாநாயக்க ஆகியோரின் பெயர் தகடுகளில் எழுதப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாரோ ஒருவடைய தேவைக்கு அமைய சூனியம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சூனியம் செய்தவரினால் 10 அடி நீளத்திலான தகட்டில் செங்குத்தாக 6 பேரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் பெயர்கள் எழுத்தப்பட்டு கிடைமட்டமாக ஜனாதிபதியின் உருவம் போன்று வரையப்பட்டு அதற்கு இரண்டு பக்கங்களிலும் பெயர் எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடையை போன்று அடை அணிந்திருந்தார்.

அதற்கமைய சூனிய தகடில் அந்த உருவம் வரையப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2 comments:

  1. நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்தவைதான் எத்தனையோ.

    ReplyDelete

Powered by Blogger.