Header Ads



பொலிஸாரினால் ஞானசாரா கைது, மீண்டும் விடுதலையானார்

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றிற்கு சென்ற நிலையில் சற்று முன்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தேரர் மீதுள்ள ஒரு முறைப்பாட்டுக்கு அமைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு இரண்டவாது தடவையாக பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் ஊடாக வாக்குமூலம் ஒன்று பெறப்பட்ட நிலையில் கைதான தேரருக்கு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக சரணடைந்த நிலையில் தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இவனுக்கே பிணை கிடைத்தால் வேறு எவனுக்குத்தான் சிறை கட்டினானோ

    ReplyDelete
  2. சமூகத்தை விற்றுப் பிழைக்கும் எமது 21 காவி அணியாத பூசாரிகளும் நேற்று MY 3 பளு சேனாவின் " கஞ்சி தன்சலில் " கலந்து கொண்டது ... டீல் "தாச " க்கும் "சாரனுக்கும்" சாரியைக் கழட்ட சுப நேரமாய் போய் விட்டது. எமது பூசாரிகளை அடுத்த தேர்தலில் " மஞ்சள் காவியுடை போர்த்தி அனுப்பி வைப்போம்.


    செய்தித் தளங்களுக்கெல்லாம் அடுத்த பிரேக்கிங் நியூஸ் இதுதான்
    1- சாரன் சரணடைந்தான்
    2- காக்கிச்சட்டைகாரன் பிணை வழங்க மறுப்பு தெரிவிக்க வில்லை
    3- சங்க சபை இன வெறியன் சாரனுக்கு சங்கூதுகிறது
    4- பாராளுமன்றமும் சட்டமும் விபச்சாரம் செயவதால்
    எல்லாமே ரெடிமேடு நிவ்சாகதான் இருக்கும். புத்தனின் போதனைகளும் இவர்களின் புத்தியை தீட்ட...போதவில்லையென்றால்....... நாம் யாரையும் நொந்து கொள்ளாமல் அல்லாஹ்விடமே இருக்கரமேந்திப் பிரார்த்திப்போம் இவர்களுக்கு ஹிதாயத்தை நஸீபாக்க.

    ReplyDelete
  3. உலக வரலாற்றில் ஒரே நாளில் இரு வேறு நீதிமன்றத்தில் இரு பிணை வழங்கப்பட்டது இதுவே முதல் முறை. அந்த நாலு போலிஸ் குழுவும் எங்கே இப்போ?

    ReplyDelete
  4. நக்குண்டார் நாவிழந்தார் நேற்று தின்ன தந்தார் அதற்கு பதிலாக இன்று விடுதலை கொடுத்தார். கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரி.

    ReplyDelete

Powered by Blogger.