June 21, 2017

இலங்கையில் ரோஹிங்கியா பெண் துஷ்பிரயோகமும், ஞானசாரரின் விடுதலையும்..!!

-Mohamed Thaha Farzan-

1) ஞானசார தேரரின் பிணை விடுதலை -

இனிவரும் காலங்களில் தேரர்களின் தலைமையில் மியன்மார் பாணியில் இனவாத செயற்பாடுகள் கொம்பு சீவிவிடப்படும். அரச இயந்திரம் அதற்கு முழு ஆதரவு வழங்கும். முஸ்லிம் தலைமைகளின் அதிரடிப் பேச்சுக்கள் பாராளுமன்ற படிக்கட்டுக்களுடன் செல்லாக்காசாக மாறும். ஆங்சாங் சூக்கியை ஒத்த காந்தியின் நடிப்பு மைத்திரியின் வடிவில் நோபல் பரிசை வெல்லும் வரை தொடரும்.

2) இலங்கையில் தஞ்சம் புகுந்த ரோஹிங்கியா அகதிப் பெண் போலிஸ் அதிகாரியால் துஷ்பிரயோகம் -

நாளைய கலவரத்தில் இலங்கை முஸ்லிம் மங்கையரின் கற்புப் பறிப்புக்கான போலிஸ் துறையின் முன் ஒத்திகை.

என்ன செய்யலாம்?
இஸ்லாத்தை உயிருக்கும், உடைமைகளுக்கும் அஞ்சி அடகு வைத்து, பிரித் ஓதி, தன்சல் கொடுத்து, பள்ளிக்குள் பண ஓதும் குப்ரியத்தை விட்டு விட்டு, குப்ரிய தலைமைகளின் உச்சந்தலையை உச்சி குளிர வைக்கும் முதுகு சொறியும் இழிச் செயலை கைக் கழுவிவிட்டு, அர்ஷின் அதிபதி அல்லாஹ்வை திருப்தி படுத்தும் வழிகளின் பால் எமது கவணத்தை திருப்புவோம். இறைவனை மட்டுமே சார்ந்திருக்கும் மனோ நிலையை எம் சந்ததிகளுக்கு இனி மேலாவது உணவோடு ஊட்டுவோம். மறந்து போன நபிமார்களதும், நபித்தோழர்களதும், நல்லறிஞர்களினதும் ஈமானிய வீரம் சொறிந்த வரலாறுகளை தூசி தட்டி நம் தளிர்களுக்கு பாடமாய் நடாத்துவோம்.

கரப்பான் பூச்சியை கண்டாலே கணவனை அழைக்கும் நங்கையருக்கு கற்பை காக்கும் தற்காப்புக் கலையை கற்றுக் கொடுப்போம்.

அடங்கிப் போகும் "சிறுபான்மை" எனும் சொல்லை பிஞ்சுகளின் அகராதியில் இருந்தே அழித்துவிட்டு, காலித் இப்னு வலீதின் சாணக்கியத்தை எடுத்துச் சொல்வோம்.

இன்றைய உடனடித் தேவை உளவியல் ரீதியாக நம்மவர்களை உயர்த்துவதே. அதற்கான கட்டுச் சாதணங்களை உடனடியாய் சேகரிப்போம். மரண பீதியை மண் தோண்டிப் புதைத்துவிட்டு, அல்லாஹ்வை சந்திப்பதை ஆசிக்கும் அகங்களை உருவாக்குவோம்.

5 கருத்துரைகள்:

Yes this is what we need now

முதலில் ஞானசார தேரர் தலைமறைவு, தேடல், சரண், கைது, விடுதலை பற்றி பார்ப்போம்....
இதுவெல்லாம் ஒர் அமைச்சில் குழப்பம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவா? அல்லது முஸ்லிம்களுக்காகவா?
முஸ்லிம்களுக்காக தான் அவர் தேடப் படுகிறார் என்ற மாயையை நீங்களாக ஏற்படுத்தி விட்டீர்கள்.
அதுவே பெளத்த மக்களிடம் பரவி அனுதாபத்தையும் ஆதரவையும் பெற வைத்து விட்டது.
விடுதலையையும் வாங்கிக் கொடுத்து விட்டது.
முதலாவது ஆழ்ந்து சிந்திக்க பழகுவோம்.....
சிறந்த அரசியல்வாதிகளை உருவாக்குவோம்.....
இஸ்லாத்தின் பண்பாடுகள் மூலமாக அனைவரையும் ஈர்ப்போம்.
இஸ்லாத்தை வாழ வைக்க தியாகங்கள் செய்வோம்.
இழப்புகளை சகிப்போம்....
இஸ்லாத்தை முழுமையாக விளங்கி நடைமுறைப் படுத்தாத முஸ்லிம்களையா போரடச் சொல்லி தூண்டுகிறீர்கள்


செயற்படுத்துவதை இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும்

நல்லதொரு பதிவு ஒவ்வொருவரும் ஈமானுடன் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.

please stop comparing sri lanka to myanmar and remember BBS obtained only 4500 votes Island wide during last election. this is it. some racist politicians using this monk to score votes in the upcoming elections and some opportunists trying to make some quick bucks. anyhow yahapalanaya govt must reign in these racists immediately or loose the crucial muslim votes in future elections and die a natural death.

Post a Comment