June 29, 2017

ரிஸ்வி முப்தியின், புரட்டப்படாத பக்கங்கள்...!

அ, இ, ஜ, உ தலைவர் என்பதைத் தாண்டி இவரது தனிப்பட்ட, குடும்ப, அறிவு, ஆன்மீக, வாழ்க்கையில் இவரை சரியாக புரிந்து கொண்டவர்கள் மிகவுமே அரிது..

என்றும் எனது மரியாதைக்குரிய உஸ்தாத் ரிஸ்வி முப்தி ஹபிழஹுழ்ழாஹ் அவர்களை அதிகமானவர்கள் விமர்சனக் கண்கொண்டே பார்க்கிறார்கள் வெளியிலிருந்து நாலுபேர் நாலு விதமாக பேசுவதைக் கேட்டுக் கொண்டு இதுதான் உண்மை என நம்பிக்கொண்டு இருப்பவர்களே ஏராளம், அவரோடு பத்து வருடத்துக்கும் மேலாக அவரது சகவாசத்திலே வளர்ந்த நாம் அவரது அறிவு, ஆன்மீகம், பக்குவம் போன்றவற்றை கண்ணால் பார்த்து நம்பினோம், உழைப்பின் நேர்மையை அவரது நடத்தைகளில் பிரதிபலிக்கக் கண்டோம்.

2008 ம் ஆண்டு ஒரு நாள் ஸஹீஹுல் புஹாரியை எங்களுக்கு படித்துத் தரும் வேளையில் அ,இ,ஜ,உ பற்றிய உரையாடல் வந்த போது எங்களை நோக்கி "பிள்ளைகளே என்னை நோக்கிய அவதூறுகளையும் வதந்திகளையும் நான் கொஞ்சமேனும் பொருட்படுத்துவதில்லை எனக்கூறினார் அவர் அ,இ,ஜ,உ வை பொறுப்பெடுத்த அந்த நேரம் பைதுல் மாலில் 2000 ரூபா மாத்திரமே எஞ்சியிருந்தது தலைமைக்கு வந்த எமது உஸ்தாத் பொறுப்பதிகாரியிடம் இந்த 2000 ரூபாயையும் யாருக்கேனும் தர்மம் செய்து விடுங்கள் பூச்சியத்திலிருந்து நாமாக இதற்கு நிதி திரட்டிக் கொள்ளலாம் என்றார்கள்..இன்று பல இலட்சம் பல கோடியென பெருகியுள்ளது. தலைவரான காலம் முதற்கொண்டு இன்றுவரை ஒரு சதத்தையேனும் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தியது கிடையாது என்பதற்கு 
அவரோடு வாழ்ந்த நாமே சிறந்த சாட்சிகள்.

பிள்ளைகள் அன்பளிப்பாக கொடுப்பதையே உஸ்தாத் அவர்கள் விரும்பவதில்லை என்பதற்கு எம்மை விட வேறு சான்று யார்தான் இருக்க முடியும், சரி பட்டம் பெற்று வெளியேறிய பின்னும் மாணவர்களோடுள்ள அவரின் உறவு பாராட்டத்தக்கது, ஒரு நாள் தொலைபேசியில் "வாப்பா முபாரிஸ் நாங்க உங்க ஊரால தான் போறோம் கொஞ்சம் ரெடியா இருங்க சந்திப்போம் என்றார்கள்" நானும் பாதைக்கு வந்து காத்திருந்தேன். வந்தார்கள், எமதூரிலுள்ள உணவத்திற்குச் சொன்றோம் சாப்பிட்டோம் வந்த விருந்தாளியை நாம் அல்லவா கவனிக்க வேண்டும் என்று பணத்தை நீட்ட என்னையறிந்த, உஸ்தாதை அறிந்த அக்கடைக்காறர் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.. இது அவருக்குத் தெரியாது அவர் போய் பணத்தைக் கொடுக்க உஸ்தாதிடமிருந்தும் அக்கடைக்காறர் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.. கடுமையாக அவரை வற்புறுத்தி கடைசி வரை பணத்தை கொடுக்காமல் நான் செல்ல மாட்டேன் என்று கூறி கொடுத்துவிட்டே வெளியேறினார்.. ஐந்து சதமேனும் அடுத்தவனது சொத்துக்கு ஆசைப்டாத.. பதவியைக் காட்டி பணம் பறிக்கின்ற அற்பத்தனத்தை அணுவளவும் அவரோடிருந்த பத்து வருட வாழ்க்கையிலும் நாம் கண்டது கிடையாது..

அதிகாலை தஹஜ்ஜுதுடைய நேரம் மூன்றரை மணிக்கு எமக்கு அழைப்பு வரும் பிள்ளைகள் நான்கு மணிக்கு வகுப்புக்கு ரெடியாகுங்க நான் நாட்டுக்கு வந்துட்டேன்... வெளிநாடு சென்று நாடு திரும்பியதும் மனைவி மக்கள் ஞாபகம் வந்தாலும் வராவிட்டாலும் தமது கடமைகள் பற்றிய பொறுப்புணர்ச்சி ஞாபகத்துக்கு வந்துவிடும்.. என்று இப்படி முன்மாதிரியாக வாழ்கின்ற எமது உஸ்தாத் அவர்களின் பல பக்களையும் எம்மால் அலச முடியும்..

கையில் புத்தகங்களும் எப்பொழுதும் வாசிப்பும் கவலை தோய்ந்த முகமும் அன்பான புன்னகைக்கும் சொந்தக்காறர் அவர், இளகிய மனம் கொண்ட அவர்களின் அழுகை தஹஜ்ஜுத் துஆவிலிருந்து மிம்பர் மேடைகள் வரை ஒலித்துக் கொண்டிருக்கும்..

சமூக தலைவர் என்ற வகையிலும் மனிதன் என்ற ரீதியிலும் சில பலவீனங்கள் இருக்கலாம் அதற்காக நாம் அறியாத நம் கண்களுக்கு புலப்படாத விடயங்களை பேசுவதையும் அவதூறுகளை பரப்புவதையும் விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

By - Shk TM Mufaris Rashadi

0 கருத்துரைகள்:

Post a Comment