Header Ads



ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடு - சரத் வீர­சே­கர முறைப்­பாடு

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின்   தலைவர்  ஜோக்கின் அலெ­க்சாண்­ட­ரிடம்  மகஜர் கைய­ளித்­துள்ளார். 

தவ­றான தக­வல்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு இலங்கை  அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்டும் என அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும்  எனவே அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று   அந்த மக­ஜரில்  தெரி­விக்­ கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் இடம்­பெற்ற அமர்வு ஒன்றில் உரை­யாற்­றிய சரத் வீர­சே­கர குறிப்­பி­டு­கையில் 

சுயா­தீன நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள்  குறித்த ஐக்­கிய நாடு­களின் விசேட ஆணை­யாளர் மொனிகா பின்­டோவும் இல ங்கை  தொடர்­பான  தவ­றான தக­வல்­களைக் கொண்டு   அறிக்­கையை  வெளியிட்­டுள் ளார்.   இத­னூ­டாக ஐக்­கிய நாடு­களின் விதி­மு­றைகள் மீறப்­பட்­டுள்­ளன.

அமெ­ரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களின் இரா­ணுவ வீரர்­களை நடத்­து­வ­தைப்­போன்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை  இலங்கை இரா­ணு­வத்­தையும்  பார்க்­க­வேண்டும். இலங்­கையில்  கலப்பு நீதி­மன்றம் ஊடாக  விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று நீங்கள் வலி­யு­றுத்­தினால் அதே வலி­யு­றுத்தல்  அமெ­ரிக்க மற்றும்  பிரிட்டன் இரா­ணுவம் தொடர்­பிலும் இடம்பெறவேண்டும்.  புலிகளை தோற்கடித்த தன் மூலம்  அனைத்து இலங்கையர்களின தும் மனித உரிமையை  இராணுவம் காப் பாற்றியுள்ளது என்றார். 

1 comment:

  1. Mr Sarah - Hussain is a puppet of West.

    You can't do anything.

    ReplyDelete

Powered by Blogger.