Header Ads



வாகன இறக்குமதி அனுமதிபத்திரம் மூலம், வடக்கு மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய திட்டம்

வடமாகாண பிரதிநிதிக்கு கிடைத்துள்ள தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் மூலம் கிடைக்கும் நன்மைகள் முழுக்கமுழுக்க வடமாகாண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) அறிவித்துள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்வையற்ற வாகன இறக்குமதி பத்திரங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

"பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது போன்று தற்போது வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. மக்கள் சார்பாக அமானிதமாக வழங்கப்படும் பதவிகள் மூலமாக கிடைக்கப்பெறும் இது போன்ற வரப்பிரசாதங்கள் பதவியில் இருக்கின்ற பலராலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டே வருகின்றன. இவற்றை விற்று பெறும் பணத்தை தமது சொந்த இலாபங்களுக்காக பலரும் பயன்படுத்திக் கொள்கின்றனர் அல்லது இதன் மூலம் கிடைக்கும் பல மில்லியன்கள் பெறுமதியான வாகனத்தை பதவியிலிருப்பவர்கள் சொந்தமாக்கி கொள்கின்றனர்ம. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அரசியல் கோட்பாடுகளுக்கு இது முற்றிலும் விரோதமானதாகும்.

எனவேதான், மக்கள் சார்பாக அமானிதமாக கிடைக்கும் பதவி வழிமூலமாக கிடைக்கப் பெறும் இது போன்ற வரப்பிரசாதங்கள் எதனையும் எவரும் தனிப்பட்ட பொருளீட்டல் நடவடிக்கையாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதனையும், அவையனைத்தும் மக்களின் நன்மைகளுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் தனது அடிப்படைக் கோட்டபாடுகளில் ஒன்றாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கொண்டிருக்கிறது. 

அதற்கிணங்க, தமது கட்சி சார்பாக பதவிகளுக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் இந்தக் கோட்பாட்டினை முழுமையாக ஏற்றுக் கொண்டு மக்கள் முன் சத்தியப்பிரமானம் செய்கின்ற நடைமுறையினையும் NFGG உறுதியாகப் பின்பற்றி வருகிறது.

அந்த வகையில் , தமிழ் தேசிய கூட்டமைப்புடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக கிடைக்கப்பெற்ற வடமாகாண சபைக்கான போனஸ் ஆசனத்திற்கு அஸ்மின் ஐயூப் என்பவரை NFGG நியமித்திருந்தது.  அப்பதவியை வகிக்கும் காலத்தில் அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற 19 அம்ச ஒழுக்க நடைமுறைக் கோவை ஒன்றும்  அந்தப்பதவியினை அவருக்கு வழங்குவதற்கு முன்பாக அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதில், பதவி மீளழைத்தல் தீர்மானத்திற்கு கட்டுப்படுதல், பதவி மூலமாக கிடைக்கும் கொடுப்பனவுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் என்பவற்றை கட்சியின் ஆலோசனைகளுக்கு அமைவாக முழுக்கு முழுக்க மக்களின் நனமைக்காக  முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துதல் மற்றும் கிடைக்கும் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தனை சொந்தமாக்கிக் கொள்ளாமல் மக்களின் நன்மைக்காக பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தெளிவான நிபந்தனைகளாக  வரையறை செய்யப்படுள்ளன. இந்த ஒழுக்கக் கோவையினை ஏற்றுக்கொண்டு அதற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பேன் என்கின்ற சத்திய வாக்குறுதியினை அவர் பகிரங்கமாக வழங்கியதன் அடிப்படையிலேயே அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுமிருந்தார்.

அதற்கமைவாகவே, இந்த வாகன இறக்குமதி கோட்டாவினை வட மாகாண மக்களின் நலன்களுக்காக முழுக்கமுழுக்க பயன்படுத்துவது என தற்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

வடமாகாண மக்களுக்கு கூடுதல் பிரயோசனமளிக்கும் வகையில் எவ்வாறு இதனை பயன்படுத்த முடியும் என்ற கலந்துரையாடல்கள்ளை பல்வேறு சமூக பிரதிநிதகளுடன் நடாத்துவதற்கும் NFGG தீர்மானித்துள்ளது.   அந்த வகையில் வட மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்களை ஏற்கனவே NFGG ஆரம்பித்துள்ளது. 

கடந்த காலங்களில் காத்தான்குடி நகர சபையில் பிரதிநிதிகளைக் கொண்டிருந்த NFGG அப்பதவிகள் மூலமாகக் கிடைத்த சகல கொடுப்பனவுகளையும் மக்களின் நலன்களுக்காகவே முன்மாதிரியான முறையில் பயன் படுத்தியிருந்தது. அத்தோடு , சலுகைக் விலை அடிப்படையில் தமக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் NFGGயின் நகர சபை உறுப்பினர்கள் எவரும் சொந்தமாக்கிக் கொள்ளாது , அவற்றை பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு கட்சியிடமே அவற்றை கையளித்திருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

Powered by Blogger.