Header Ads



பயங்கரவாத சட்டத்தின்கீழ், ஞானசாரரை கைது செய்யலாம் - விக்­ர­ம­பாகு

-விடிவெள்ளி-

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் ஏனைய மதத்­த­லை­வர்கள் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தால் அதே­சட்­டத்தின் கீழ் ஞான­சார தேர­ரையும் கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­தெ­ரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு அர­சியல் அமைப்பு திருத்தம் மேற்­கொள்ளும் போது அதனை குழப்­பு­வ­தற்கு இன­வா­திகள் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­கின்­றனர். குறிப்­பாக நாட்டில் இருக்கும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் திட்­ட­மிட்­ட­வ­கையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. 

அத்­துடன் மஹ­ர­கம பிர­தே­சத்தில் முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு சொந்­த­மான கடைகள் எரிக்­கப்­பட்ட சம்­ப­வத்தில் கைது­செய்­யப்­பட்­டி­ருக்கும் சந்­தேக நபர் பொது­ப­ல­சே­னாவின் ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்­றி­வரும் நப­ராக இருந்­துள்­ள­துடன் பாதாள உலகக் கோஷ்­டி­யுடன் தொடர்­பு­டை­யவர் என தெரி­ய­வ­ரு­கின்­றது. குறித்த சந்­தேக நபரூடாக நாட்டில் இடம்­பெற்­று­வரும் நாச­கார சம்­பங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை கைது­செய்­வ­தற்கு  அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும் தலை­ம­றை­வாக இருக்கும் ஞான­சார தேரரை கைது­செய்­வ­தற்கு பொலி­ஸாரால் முடி­யாமல் போயுள்­ளது. அத்­துடன் அவரை கைது­செய்யும் போது அதற்கு அர­சியல் தலை­வர்­களின் அனு­மதி கிடைப்­ப­தில்லை என பொலிஸ்மா அதிபர் தெரி­விக்­கின்றார். மக்­களின் ஆத­ரவும் அர­சியல் தலை­வர்­களின் அனு­மதி இல்­லாத நிலையில் கைது­செய்­யும்­போது பல பிரச்­சி­னை­க­ளுக்கு பொலிஸார் முகம்­கொ­டுக்க நேரி­டு­வ­தா­கவும்  அவர் தெரித்­துள்ளார்.

அத்­துடன் ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கைகள் அனைத்தும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும். அதனால் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் ஏனைய மதத்­த­லை­வர்கள் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்தால், ஞான­சார தேர­ரையும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

காவி உடை அணிந்­த­தற்­கான சட்­டத்தை நிலை­நாட்ட முடியாது என தெரிவிக்க முடியாது,

எனவே எந்த சீருடை அணிந்த மதத்தலைவராக இருந்தாலும் சட்டத்துக்கு அனைவரும் பொதுவாகும். அத்துடன் காவி உடை அணிந்ததற்காக ஒரு வரை தேரர் என்று தெரிவிக்க முடியாது. அவர் சாசனத்தை பாதுகாக்கக்கூடியவாக இருக்கவேண்டும் என்றார்.

1 comment:

  1. இவர் ஒரு சிறந்த மாந்தருக்கு ஓர் முன்மாதிரி மனிதன்.

    ReplyDelete

Powered by Blogger.