Header Ads



அமைச்சரவையில் ரிஷாத் - சம்பிக்க மோதல், எதிர்ப்பு என எழுதச்சொன்ன ஜனாதிபதி


சம்பிக்க : – கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளம் அறுவக்காடு பிரதேசத்தில் கொண்டு செல்வதற்கு தனது அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமைச்சரவை எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

ரிஷாட் :- புத்தளத்தை அரசு தொடர்ந்து துன்பப்படுத்தி வருகின்றது.

1. வடமாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட ஒரு லட்சம் முஸ்லிம்களை தாங்கிக் கொண்டு தமது வளங்களை எல்லாம் பறிகொடுத்த பின்னர் துன்பத்திலே அந்த மக்கள் துவழ்கின்றனர். இதுவரையில் அவர்களுக்கு எந்த இழப்பீடுகளும், நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.

2. சீமெந்து தொழிற்சாலையை அங்கு நிறுவி புத்தளத்தை மாசுபடுத்தி உள்ளீர்கள்.

3. அனல்மின் நிலையத்தை அரசு கொண்டு வந்து அந்த மக்களை கஷ்டத்தில் போட்டுள்ளது.

அனுர பிரியதர்ஷன யாப்பா :– அரசு அபிவிருத்தி தானே செய்துள்ளது குறை சொல்ல வேண்டாம்.

ரிஷாட் - அபிவிருத்தி என்றால் இங்கையா கொண்டு வரவேண்டும் வேறு எங்கயாவது கொண்டு சென்றிருக்கலாமே. சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்க முற்பட்ட போது எதிர்ப்புக்களால் தானே கைவிடப்பட்டது. புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்கும் போது தொழில்வாய்ப்பில் 50சதவிகிதம் தருவதாக கூறினீர்களே, நடந்ததா?

1. 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை. தேசிய கட்சிகளுக்கு மாறிமாறி வாக்களித்து ஏமாந்து போய் உள்ளனர். அரசியல் அனாதைகளாக இருக்கும் அந்த மக்களை பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ யாரும் இல்லாத நிலையில் நீங்களும் துன்பப்படுத்துகிறீர்கள்.

2. இந்த விடயத்தில் நான் கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். விட்டுக்கொடுக்க மாட்டேன். பலவந்தமாக திணிக்க முடியாது.

கபீர் காசிம் - அமைச்சர் ரிஷாட் கூறுவது சரி. அவர் கூறுவதில் நியாயம் இருக்கின்றது.

ஜனாதிபதி – (அமைச்சரவை செயலாளரை நோக்கி) அமைச்சர் ரிஷாட் இதற்கு எதிர்ப்பு என்று எழுதிக் கொள்ளுங்கள்.

ஜனாதிபதி – அமைச்சர் சம்பிக்க இந்த விடயங்களை புத்தள மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் விளக்கி மக்களின் ஒத்துழைப்பை பெறமுடியும்.

ரிஷாட் - மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அநேகர் ஆனமடுவ, வென்னபுவ தொகுதிகளிலிருந்து கலந்து கொள்பவர்கள், இவர்கள் இது சரி என்று தீர்மானம் எடுத்தால் என்ன நடக்கும். எனவே, இந்த விடயத்தில் நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

-Siddeque Kariyapper-

8 comments:

  1. நல்ல விசயம். நன்றி மறக்காமல் நடந்துள்ளார்...

    ReplyDelete
  2. அமைச்சர் றிசாத் அவர்களின் அண்மைக்கால நடவடிக்ககைள் மிகவுமே பாராட்டப்படத்தக்கதாக உள்ளது. வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களே.

    தங்களது இவ்வாறான நிலைப்பாட்டிற்கு அல்லாஹ் உங்களைப் பாதுகாக்கப் போதுமானவன்.

    மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் துணிவுடன் முன்னேறுங்கள. இன்சா அல்லாஹ் நாம் அவர்களை முறைப்படி எதிர்கொள்வோம்.

    ReplyDelete
  3. வடமாகாணத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அதிகமானோர் புத்தளம் மாவட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றார்கள், அத்தோடு வடபுல முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருந்தபோது உதவிக்கரம் நீட்டியவர்கள் புத்தளம் வாழ் முஸ்லிம்கள் எனவே புத்தளத்தை பாதுகாப்பதும் பத்தளம் பிரதேசத்தின் உரிமைக்காக குரல்கொடுப்பதும் எங்களது கடமையாகவும் இருந்துகொண்டிருக்கின்றது. எனவே புத்தளத்தை பாதுகாக்க தேசியத்தலைவர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம்,அத்தோடு அவரின் இலக்கின்பால் போராடுவதற்கும் அனைவரும் தயாராகவேண்டும் "இன்ஷாஅல்லாஹ்"

    ReplyDelete
  4. Allahu Akbar

    ReplyDelete
  5. let them take this to Polonnaruwa (Our Grama Sevaka's electorate).

    ReplyDelete

Powered by Blogger.