Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், தம்மை வாக்காளர்களாக பதியாலாம்..!

வெளிநாடுகளில் இலங்கைக் குடியுரிமையுடன் வசிப்பவர்களது பெயர்களை வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இங்குள்ள அவர்களது உறவினர்கள் இணைத்துக்கொள்ள முடியும்என தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நடப்பு ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த மாதம் 15 ஆம் திகதி வரையில் இந்த நடவடிக்கை தொடரவுள்ளது.

வெளிநாடுகளுக்குத் தற்காலிகமாகச் சென்றுள்ளவர்கள், கல்வி கற்பதற்காக அங்கு சென்றுள்ளவர்களின் பெயர்களையும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெறாமல், இலங்கைக் குடியுரிமையைக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் இது பொருந்தும்.

அப்படியானவர்களின் பெயர்களை இங்குள்ள அவர்களது உறவினர்கள் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் இணைத்துக் கொள்ளும் போது அவர்களின் கடவுச் சீட்டு இலக்கங்களை வழங்கவேண்டும்.

இதேபோன்று நாட்டில் பலர் இப்போது இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கின்றார்கள். அவர்களும் தம்மை இங்கே வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழின் இலக்கத்தை வழங்கி அவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. It's not a big deal for registering the names, how can we cast our votes during elections? Time has come to do the needful Mr Moh.

    ReplyDelete

Powered by Blogger.