June 19, 2017

அர­சாங்­கத்தின் அடைக்­கலம் இல்லாவிடின், ஞானசாரர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் - மஹிந்த

இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்­னால் ­பொ­து­பல சேனாவே உள்­ளது.  அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார். 

மாத்­தறைப் பிர­தே­சத்தில் விகா­ரை­யொன்றின் கட்­டடம் ஒன்றைத் திறந்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறு­கையில்,

பெளத்த மதத்தை பாது­காத்து நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து  பெளத்த  மதத்­துக்­கா­கவும் இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு    சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.

புதிய சட்­டங்­களை  கொண்­டு­வந்து நாட்டில்  மதம், இனம் என்­ப­வற்­றி­லி­ருந்து மக்­களைத் தூரப்­ப­டுத்­து­வ­தற்­கான  முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும் போது சம­யத்தின் மீதுள்ள பற்று அதி­க­ரிக்­குமே தவிர  அது குறை­யாது. 

இன்றும் அதுவே இலங்­கையில் இடம்­பெற்று வரு­கின்­றது. பெளத்த மதத்தை காப்­பாற்­று­வதை தவிர்த்து இந்த நாட்டில் பௌத்தம் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த கார­ணத்­தினால் தான் நாட்டில் பெளத்த மத போராட்­டங்கள் வெடிக்க ஆரம்­பித்­துள்­ளன.  அதேபோல் பெளத்த பிக்­கு­களே இந்த அர­சாங்­கத்­தி­னால் அதிகம் துன்­பு­றுத்­தப்­ப­டு­ப­வர்கள். அதேபோல் இந்த நாட்டை கட்டிக் காப்­பாற்­றிய எமது பாது­காப்பு படை­யினர் அடுத்­த­ப­டி­யாக கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர்.

நாட்டில் இன­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு தேவை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும், தேவைப்­படின் புதிய சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யா­வது இன­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அறி­வித்­தி­ருந்­தமை எனக்கு நினைவில் உள்­ளது. 

இந்த நாட்டில் சிங்­கள பெளத்த கொள்­கையை உறு­திப்­ப­டுத்­து­வதை தவிர்த்து பெளத்த  மதத்­துக்­கா­கவும் இனத்­துக்­கா­கவும் குரல் எழுப்­பு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொடர்­வ­தற்கு   சட்டம் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.  

இந்த நாட்டில் இன­வாத செயற்­பா­டு­களின் பின்னால் பொது­பல சேனாதான் உள்ளது என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அவர்­க­ளுக்கு அர­சாங்­கமே அடைக்­கலம் வழங்கி வரு­கின்­றது. அர­சாங்­கத்தின் அடைக்­கலம் இல்லாவிடின் ஞானசாரர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்றும் அவர் அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ளார். 

ஆகவே அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்லாது இந்த நாட்டில் இனவாத செயற்பாடுகளையும் பரப்பி வருகின்றது  என்றார்.

2 கருத்துரைகள்:

Why police can't catch and ask at BBS other members....???
தேவையில்லை என்ற எண்ணம் தானே....

If Muslims have not burnt themselves ENOUGH yet, they will continue to support all this tiny Muslim parties and GREEDY Muslim politicians that have pawned them and their future generations and doom themselves to extinction like Myanmar; they will also continue to listen to their cap and turn to Mahinda who once wanted the breasts of Muslim women for his religious rituals who also campaigned 'Tamils & Muslims can not dance the way they wanted in this country, sahodharayo!'.

IF NOT, THEY WILL UNITE AND JOIN HANDS WITH JVP, not for Ministerial portfolios but for their voice for basic rights heard both nationally and internationally.

Remember! Tamils will never forget what Mahinda did to them; will never go back to Mahinda again!

I have known from Rauff's history exactly where he had, as well as keeps having, his mouth and tongue busy when he supposed to use them for Muslims' need; I have seen pictures how Rishad's jaw dropped only to get his tongue tied when he was slapped with another Ministerial portfolios and not to mention, the rest, are here only to make wealth for their family and want their Janaza leave only from the parliament.

I wonder what kind of food Muslims eat- what do they REALLY eat?!

Post a Comment