Header Ads



முஸ்லிம் கடைகள் எரியும்போது, விசாரணைக்கு முன் பொலிசார் தீர்ப்புக்கூறுவது கேவலமானது - ரிஷாட்


மீண்டும் மீண்டும் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து வேண்டுமென்றே அழித்து வரும் நாசகாரிகளை கண்டு பிடிக்க வேண்டிய பொறுப்புக் கொண்ட பொலிசாரும் பொலிஸ் திணைக்களமும் அதனைச் செய்வதை விடுத்து, கடை எரிப்பு சம்பவங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு வேறு வியாக்கியானம் கூறி வருவது கேவலமானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மகியங்கனையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனம் ஒன்று எரிந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் பிரதேச பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு சம்பவத்தைத் தான் எடுத்துரைத்த போது "வயர் சோட்டாய் இருக்கலாம்" என்று அந்த அதிகாரி பதிலளிக்கின்றார்.

கடந்த வாரம் மஹரகமையில் முஸ்லிம் ஒருவரின் கடை எரிந்த போதும் அங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி இதே போன்றதொரு பொறுப்பற்ற பதிலைத்தான் கூறினார்.

தொடர்ச்சியாக 2 மாதங்களாக முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாயல்கள் பெற்றோல் குண்டுகளால் தாக்கப்படுகின்றன. அதுவும் நள்ளிரவிலும் நடு நிசியிலும் மிகவும் திட்டமிட்டு இந்த அராஜகங்களை இனவாதிகள் புரிந்து கொண்டிருக்கும் போது சிறுபான்மைச் சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொலிசார் சட்டத்தை கையிலெடுக்காமல் சாக்குப் போக்குச் சொல்லித் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு தான் நாங்கள் உரத்துச் சொன்னாலும் அவர்களுக்கு உறைப்பதாக இல்லை. அரசாங்கமும் இற்றை  வரை காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி அரசியல் நீதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

கடைகள் எரிந்து கொண்டிருக்கும் போது விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்னரேயே இப்படித்தான் ஏற்பட்டதென பொலிசார் கூறுவது இந்த நாட்டிலேயே நடக்கின்றது. மகியங்கனையில் கடை எரிந்த சமயம் இரண்டு பொலிசார் அந்தக் கடைக்கு முன்னாலேயே நின்று கொண்டுமிருந்தனரென அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். நுகேகொடை கடைகளை  தான் தான் எரித்ததாக முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இப்போது ஒப்புக் கொண்டிருக்கின்றார். எனவே பொலிசார் பொறுப்பற்ற பேச்சுக்களை நிறுத்தி தீய சக்திகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் கொண்டு வரா விட்டால் நாட்டில் விபரீத விளைவுகளே ஏற்படும்  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

7 comments:

  1. Minister அவர்களே நீங்களே சொல்லுங்கள் என்ன செய்யலாமென

    ReplyDelete
  2. It's Ok, We will answer in 2020

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு என்ன நடந்தாலும் எப்பொழுதும் நீங்கள் மட்டுமே குரல்கொடுத்து கொண்டிறிக்கிரீர்கள், ஏன் மற்றைய மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஊமைகளா?? அல்லது ஊமையாக்கப் பட்டிருகின்றர்களா?? அல்லது தேர்தல் காலங்களில் மட்டும்தான் விழித்தெழுவார்களா?? அன்புள்ள விமர்சகர்களே கொஞ்சம் உப்பு போட்டு உங்கள் விமர்சனங்களை வையுங்கள் அப்பயாவது இவர்களுக்கு உறைக்கிறதா என்று பார்போம்......

    ReplyDelete
    Replies
    1. குரல் கொடுப்பதால் ஆனது என்ன? ஒரு மயிரையும் பிடுங்க முடியவில்லை... 21 கழுதைகளும் அவனுகளின் சொந்த தேவைகளுக்காக இந்த சமூகத்தை இனவாதிகளுக்கு காட்டிக்கொடுத்துள்ளானுகள்... இந்த இனவாத கூட்டணிக்கு இவனுகளுடைய ஆதரவும் உள்ளது. இவ்வாறு தானே மகிந்தட காலத்திலும் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு கடைசி நேரத்தில் வெளியேறி இந்த கல்லாட்சிக்கு ஆதரவு வழங்கினானுகள்.. இதே விஷயம்தான் இம்முறையும் நடக்கும். தேர்தல் வரும் போது சந்தர்ப்பத்தை பார்த்து வெளியேறி அறிக்கை விடுவானுகள்...இவனுகள் 21 பேரும் எமது சமூகத்தின் துரோகிகள்....

      Delete
    2. Uppu portal uraikathu, athikama milakai podungal

      Delete
  4. "THE MUSLIM VOICE" STATES THAT IF THESE FELLOWS HAVE THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, THE PM AND PRESIDENT MAITHRIPALA SIRISENA, THEY SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's, INSHA ALLAH. MUSLIM PROVINCIAL COUNCIL MEMBERS SHOULD DO THE SAME, Insha Allah WITHOUT GIVING PRESS STATEMENTS.
    Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for there personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness". LET US PRAY GOD ALLMIGHTY ALLAH IN THIS HOLY MONTH OF RAMADHAN THAT NONE OF THESE FELLOWS SHOULD BE ELECTED TO PARLIAMENT IN THE NEXT GENERAL ELECTIONS, Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. How you say they supported this government for their personal gain ?. At that time there were no option for Muslims. they were forced to elect the present government. Don't just blame and criticize. You too have to answer Allah swt in day of judgment.

    ReplyDelete

Powered by Blogger.