Header Ads



கத்தார் வாழ் பலகத்துறை மக்களின், மாபெரும் ஒன்றுகூடல்


கத்தார் வாழ் பலகத்துறை மக்களின் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று QPA - QATAR அமைப்பினரால் நேற்று 16.06.2017 வெள்ளிக்கிழமை அன்று கத்தார் அல் பfனார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. QPA அமைப்பின் ஒரு வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இப்தார் மற்றும் வருடாந்த அங்கத்தவர் மாநாடும் இடம்பெற்றமை விஷேட அம்சமாகும்.

இப்தாரை தொடர்ந்து QPAவின் தலைவர் சகோதரர் ஷியாம் அவர்களின் தலைமை உரையோடு ஆரம்பித்த இந்த வருடாந்த ஒன்றுகூடலில் சென்ற ஆண்டிற்கான கணக்கறிக்கையை பொருளாளரான சகோதரர் ரிஸ்வான் சமர்ப்பித்தார். அதில் ஒரு வருட நிறைவில் QPA அமைப்பு பலகத்துறையில் நிறைவேற்றியுள்ள பாரிய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்கொண்ட சவால்களை உறுப்பினர்களுக்குத் தெளிவு படுத்தினார்.

அதில் முக்கியமாக,
அல் பலாஹ் மஹா வித்தியாலயத்திற்கான பாதுகாப்புக் கண்காணிப்பு நிழற்படக் கருவி (CCTV Camera) பொருத்தப் பட்டமை, ரமழானில், ஊரில் தேவையுடைய 500 குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகளை PDF-PORUTHOTA நிருவனத்துடன் இணைந்து வழங்கியமை, AL FALAH OBAவுடன் இணைந்து பாடசாலையில் இயங்கி வரும் மேலதிக வகுப்புகளுக்கான ஒரு வருட செலவை செலுத்தியமை போன்ற பெரும் வேலைத்திட்டங்க்களுடன் இன்னும் பல வேலைத்திட்டங்கள் அடங்க்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இடம் பெற்ற புதிய நிர்வாகக் குளுத் தெரிவை சகோதரர் முனாப் நடாத்தி வைத்தார். அதில் இதுவரை சிறப்பாக தம் கடமைகளை செய்த அத்தனை முன்னைய நாள் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்ததுடன் புதியவர்கள் நிர்வாகக் குளுவில் இணைக்கப்பட வேண்டிய தேவையையும் அனைவருக்கும் உணர்த்தியமை சிறப்பம்சமாகும். மேலும் இந்த வருடத்திற்கான கத்தார் வாழ் பலகத்துறை மக்களின் அமைப்பான QPAவின் தலைவராக சகோதரர் ஷியாம் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

QPA ஆனது கத்தாரின் தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் பல சவால்களையும் தாண்டி கத்தாரில் வாழும் அநேக பலகத்துறை உறவுகளை வெற்றிகரமாக ஒன்றினைத்து தொடர்ந்தும் எமது பலகத்துறைக்கான சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.