Header Ads



கட்டார் நெருக்கடியால், குளிர்காய்கிற இஸ்ரேல்


இஸ்ரேலிய செய்தித்தாளான ஜெருசலம் போஸ்ட்டில் சேத் ஜே . பிரான்ஸ்ட்மன் எழுதிய 'ஏன் கட்டார் நெருக்கடியில் இஸ்ரேல் அக்கறை காட்ட வேண்டும்?'   என்கிற கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்கள் இதோ.

1 . ஹமாஸை இந்த நெருக்கடி கடுமையாக காயப்படுத்தும் .

கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக கட்டார்,  ஹமாஸை அணுசரனை அளித்து நிதி உதவி செய்து வருகின்றது .ஹமாஸ் தலைவர் காலித் மெஸாலுக்கு கட்டாரில் வசிக்க கடந்த ஐந்து வருடமாக அது இடம் அளித்து வந்துள்ளது .2012 ஆம் ஆண்டில் அப்போதைய கட்டார் அமீர் ஷெய்க் ஹமத் பின் கலீபா அல் தானி காஸாவுக்கு விஜயம் செய்திருந்தார் .கட்டார் நெருக்கடிக்கு உள்ளானால் ஹமாஸுக்கு போதிய ஆதரவும் தோழமை நாடுகளும் இருக்காது.

2 . இந்த நெருக்கடி இஸ்ரேலை சவூதி அரேபியா ,எகிப்து ,மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மேலும் மிகவும் நெருக்கமாக்கும்.

ஈரானை எதிர்ப்பதில் சவூதி அரேபியா மற்றும் ஏனைய வளைகுடா நாடுகள் இஸ்ரரேலின் ஒத்த அபிலாசையை தம்மகத்தே கொண்டுள்ளன .கட்டார் நெருக்கடியால் கட்டாரை அந்நாடுகள் எதிர்க்கிற போது அந்த நாடுகளை இஸ்ரவேலுக்கு மிக நெருக்கத்துக்கு கொண்டு வர  வைக்கும் .
அண்மைக்காலமாக அவர்களுக்கு இடையிலான உறவுகள் அமைதியாக வளர்ந்து வருகின்றன .ஹமாஸுக்கு எதிராக அவை செயற்படுகின்ற போது இஸ்ரவேலுக்கு அந்நாடுகளுடன்   மேலும்
நெருக்கத்தை ஏற்படுத்தும்.

3 .அமெரிக்காவின் செல்வாக்கு மீண்டும் பிராந்தியத்தில் வலுப்படுத்தப்பட்டுள்ளது 
என்பதை இந்த நெருக்கடி காட்டுகிறது.

அதாவது அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்த வேளை நடைபெற்ற சந்திப்பில் பயங்கர வாதத்துக்கு எதிராக பேசியதுடன் அவரது பேச்சின் உத்வேகம் வளைகுடா நாடுகளுக்கு தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க வெற்று காசோலை கொடுத்தது போல அனுமதியை கொடுத்துள்ளது.

4 பயங்கர வாதத்தை சட்டவிரோதமானதாக ஆக்கும் 

இதன் மூலம் பிராந்தியத்தின்
ஸ்திரப்பாடு தோன்றும் அதுவே இஸ்ரேலின் ஆவலும் ஆகும் . சைனாயில் ஐசீஸ் உள்ளது ,காஸாவில் ஹமாஸ் உள்ளது கோலானிலும் லெபனானிலும் ஹிஸ்புல்லாஹ் உள்ளது  .இந்த விடயத்தில் எகிப்து ,ஜோர்தான் ,சவூதி ஆகியன இணைந்து செயற்படும் போது இஸ்ரேலுக்கு சார்பாக காற்றை வீச வைக்கும் .

5  . இது பொதுவாக இஸ்ரேலின் கையை உயர்த்த வைக்கும் விசேடமாக இஸ்ரேலிய அரசாங்கத்தை ..

அதாவது இஸ்ரேல் மீது நெருக்கடியோ அழுத்தமோ இல்லாத நிலையில் அல்லது அதை உலக நாடுகள் உற்று நோக்காத பொழுதுகளில் இஸ்ரேல் அனுகூலம் அடைகிறது . ஏற்கனவே பலஸ்தீன பிரச்சினையானது  , சிரியா, ஈராக் ,யெமன் ,லிபியா ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைககளால் கவனம் செலுத்தப்படாமல் இருக்கிற நிலையில் பலஸ்தீனர்கள் 50 வருட இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து பிரபலம் தேட முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் இந்த நெருக்கடி உலகை திசை திருப்பி இஸ்ரேல் மீது அழுத்தத்தை இல்லாமல் ஆக்கும் .

எப்படி இருக்கிறது ...? 
கட்டார் நெருக்கடியின் பிண்ணனியில் மட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சினைகளின் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள் என்று தெரிகிறதா.. ?

மொழிபெயர்ப்பு -முஹம்மது ராஜி

No comments

Powered by Blogger.