Header Ads



இனரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க, முஸ்லிம்களிடம் தெளிவான திட்டம் இல்லை - அஷ்ஷெய்க் மஸாஹிர்

-எம்.ஜே.எம். தாஜுதீன்-

தற்போது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியூள்ள இனரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முஸ்லிம் சமுகத்திடம் தௌpவான திட்டங்கள் இல்லாதிருப்பது பெரும் குறைபாடாகும் என விரிவூரையாளர் அஷ்ஷெய்க் எஸ். எம். மஸாஹிர் கூறினார்.

நீர்கொழும்பில் இயங்கும் இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்களின் சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பின் (ளநனழ) 16 ஆம் வருட சமூக ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வூ  நேற்று (08.06.2017) வியாழக்கிழமை நீர்கொழும்பு பெரியமுல்லை ரஷாத் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

இலங்கை முஸ்லிம்கள் தம்மீது திணிக்கப்பட்டுள்ள இனரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள பல்வேறு கோணங்களில் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.  எனினும். ஒரு தௌpவான திட்டம் இவர்களிடம் இல்லாததே இதற்கான காரணமாகும்.

எமது பாராளுமன்றத்தில் நாம் 21 முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறௌம்.அவர்களும் பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் இது தொடர்பில் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர்.

எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் கட்சிகளின் அடிப்படையில் தனித்தனி பிரிவினை கொண்டதாக இருப்பதனால் எமது முஸ்லிம் சமூகம் அதனால் நன்மையடையவில்லை.

தத்தமது கட்சிகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு முஸ்லிம் சமூகம் ஒரே உம்மத் என்ற அடிப்படையில் எமது கூட்டு முயற்சிகள் அமைந்தால் மட்டுமே நாம் இந்த இனரீதியான பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியூம்.

நாம் சிறுபான்மையினர் என்ற உணர்வூடன் பயந்தவர்களாகவோ, கோழைகளாகவோ இருந்துவிடாமல் எமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக துணிந்தவர்களாக விவேகத்துடன் திட்டமிட்டு செயற்படவேண்டும் என்றும் கூறினார்.



1 comment:

  1. ஒரு முஸ்லிம் கல்விமானாக இருந்துகொண்டு முஸ்லிம்களிடம் திட்டம் இல்லை என்று கூற வெக்கம் இல்லையா. அதை கூறுவதற்கு ஒரு கல்விமான் தேவையில்லையே.ஒரு சாதாரண பாமரன் போதுமே.ஏன் அவ்வாறு ஒரு திட்டத்தை உங்களால் தயாரித்து முன்வைக்க முடியாது?

    ReplyDelete

Powered by Blogger.