Header Ads



பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டுவது பேரழிவுக்கு வழிவகுக்கும் - அஸ்கிரிய பீடம்

பௌத்தர்களையும், பிக்குமாரையும் சீண்டத்தொடங்கியிருப்பதானது மிகவிரைவில் சீர் செய்ய முடியாத மாபெரும் பேரழிவு ஒன்றுக்கு நாட்டை தள்ளிவிடக் கூடும் என்று அஸ்கிரிய பீடம் எச்சரித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக அஸ்கிரிய மகாநாயக்க பீடத்தின் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கண்டியில் நடைபெற்றது.

இதன் போது அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரின் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.

ஞானசார தேரரின் போக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றபோதிலும் அவர் வெளியிடும் கருத்துக்களில் உண்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பௌத்தத்துக்கும், பௌத்த சின்னங்களுக்கும் , பௌத்த கலாச்சாரத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிக்குமார்களுக்கும் நெருக்கடி ஏற்படுத்தப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் நாட்டில் மிக விரைவில் ஒரு பெரும் பேரழிவு அவலம் ஏற்பட்டு, மீளச் சீர் செய்ய முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

எனவே இதனைப் புரிந்து கொண்டு சிங்கள மக்களின் பெருந்தன்மையை உணர்ந்து ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் செயற்பாடுகளை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது நன்று எனவும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9 comments:

  1. ஞானசார பிக்கு/BBS க்கு சில சிங்கள மினிஸ்டர்கள் மட்டுமே ஆதரவளிக்கவில்லை.
    முழு அஸ்கிறிய பீடமே ஆதரவளிக்கின்றது.

    அஸ்கிறிய பீடத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்தவொரு அரசும் (UNP or SLFP) செயல்பட்டதாக வரலாறு இல்லை.

    எனவே, மாறி மாறி யார் ஆட்சிக்கு வந்தாலும் ஞானசார்ர் பிக்கு/BBS யின் அட்டகாசங்கள் மேலும் அதிகமாக தொடரும்.

    ஆனால், ஜெனிவா தீர்மானத்தின்படி அரசின் தமிழர்களுக்கான 'பொறுப்பு கூறும்' செயர்பாடுகள் இன்னும் இழுபடுவதனால், தற்போதைக்கு தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.

    பொறுத்திருந்து தான் பார்ப்போமே இது எங்கே போய் முடிகின்றது என.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அவர் நடத்தும் நாடகத்தில் இவரும் உண்டோ.பேச்சில் மகிந்தயின் வாடை வீசுகிறதே.

    ReplyDelete
  4. Dear Askiriya Thero, so you justify gnanasera's brutal, cruel, barbaric activities.... that mean you too ready for such behaviour... DON'T YOU FEEL SHAME TO COMMENT LIKE? see in Myanmar.. at least now.. the top monks have taken action to (gnanasera's role model) Viraath barbarian to stop him from such brutal acts, and finally saved their respect as true monks.. WHY DON'T YOU THINK THAT WAY?? WHY DO YOU WANT TO GO BEHIND GNANASERA'S JEALOUSLY LIES & GOSSIPS rather than go behind buddha's teaching?? WHY CANT YOU BE LIKE PREVIOUS ASGIRIYA TOP MONK who recently passed away? We Muslims respect him.

    DEAR MONK, DONT THREAT to kill THE JUSTICE WHICH IS ALREADY in serious coma condition in Sri Lanka! Please Help to save it's life!

    Dear Agiriya There....BE A GOOD BUDDHIST AS BUDDHA TAUGHT YOU... like SOBITHA THERO, AMILA THERO, VAJIRA THERO, and also like THALAI LAAMA, so on.... Then we other religious people particularly Muslims would respect you and appreciate you AS WE DO TO THE ABOVE MONKS!

    BE GENEROUS! BE HUMAN! BE PEACEFUL! THEN OUR COUNTRY WILL BE DEVELOPED & PEACEFUL LIKE SINGAPORE!

    PLEASE KEEP IN MIND THAT BLOODY "ISIS" IS TRUE PRODUCT OF US & ISRAEL, not Muslim group. it is created to demolish Islam's good name and Muslims and destruct their economy. but of cause they will fail!

    ReplyDelete
  5. இத்துடன் ஞானசாரவின் கைது நாடகம் நிறைவு பெறுகிறது... இவன் எந்த அட்டூழியத்தையும் செய்யலாம். எந்த நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் எச்சரிக்கை செய்யலாம். இவனுக்கு இலங்கையில் நீதி மன்றத்தால் நீதி வழங்க இங்குள்ள அரசு அனுமதிக்காதது.. இது தான் நியதி..

    ReplyDelete
  6. அனைத்து மினிஸ்டர்களும் ஆதரித்து அஸ்கிரிய பீடமும் மல்த்து பீடமும் ஆதரித்தாலும் எங்கள் மனதில் அச்சம் இல்லாத போது உன்றையும் புழுத்தப் போதில்லை நாங்கள் மரணத்திற்குப் பயப்படாவிட்டால் ஒன்றையும் புடுங்க முடியாது ஒரு முஸ்லிம் அவனது சொத்தை அல்லது அவனது குடும்பத்தை அல்லது அவனது மானத்தைக் காப்பதற்காக எதிரியுடன் சட்டையிட்டு மரணித்தால் அவனுக்கு சுவர்க்கம் என்கிறது எங்கள் மார்க்கம் சுவர்க்கம் செல்வது தான் ஒரு முஸ்லிமின் இறுதி நோக்கம் என்றால் எதற்காக நாங்கள் அஞ்சவது? சில தமிழ் சகோதரர்கள் நினைக்கலாம் nஐனீவா பிரணையினால் தாங்கள் காப்பாற்றப்படலாம் என்று அது கனவு உலகில் எந்த நாட்டிலும் பெரும்பான்மையாக வாழாத தமிழர்களுக்கு nஐனீவா செல்ல முடியுமா இருந்திருக்குமானால் உலகில் 48 நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு nஐனிவா செல்வது பெரிய காரியம் அல்ல அதற்காக எத்ததனை வருடம் தமிழர்களுக்குச் சென்றது அதையும் கவனிக்க வேண்டும் சும்ம பெரிய ஆள் பத்திக் கொண்டு இனவாதம் பேசாமல்

    ReplyDelete
  7. அஜன் கனவுலகில் வாழ்ந்து கொண்டுள்ளாரோ இல்லை கஞ்சாவுடன் வாழ்ந்து கொண்டுள்ளாரோ தெரியவில்ஸை.

    ReplyDelete
  8. தமிழருக்கு ஒரு பிரச்சினையும் இல்லையெனும் கனவில்

    ReplyDelete

Powered by Blogger.