Header Ads



முஸ்லிம்க­ளுக்கு அதிக குழந்­தை­ பெற வேண்டாமென, சிங்­கள வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கு­வ­தாக குற்றச்சாட்டு

தகவல் திணைக்­கள கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்­த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

வைத்­தி­யசா­லை­களில் சிங்­கள வைத்­தி­யர்கள் முஸ்லிம் பெண்­க­ளுக்கு அதிக குழந்­தை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டாம் என்று ஆலோ­சனை வழங்­கு­வ­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது. உண்­மையில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு மாத்­திரம் இந்த ஆலோ­சனை வழங்­கப்­ப­ட­வில்லை. வைத்­தி­ய­சா­லை­களில் பிர­ச­வத்­துக்கு வருகை தரும் அனைத்துப் பெண்­க­ளுக்கும் ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கி­றது.  தாயி­னதும், குடும்­பத்­தி­னதும் பொரு­ளா­தார நலன் கரு­தியே இந்த ஆலோ­சனை வழங்­கப்­ப­டு­கின்­றது.

சிறிய குடும்பம் அமைந்தால் ஏற்­படும் நன்­மைகள் விளக்­கப்­ப­டு­கின்­றன. பொ-ருளாதார பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்கு அதிக குழந்தைகள் உள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கே இவ்வாறு ஆலோசனை வழங்கப்படுகிறது அன்றி முஸ்லிம்களின் சனத்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கல்ல. 

சீனாவில் ஒரு தாய் 2 பிள்ளைகளையே பெற்றுக்கொள்ள வேண்டும் 3 ஆவது குழந்தை கிடைத்தால் தாய்க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்.

மத தலங்கள் தாக்­குதல், வர்த்­தக நிலை­யங்கள் எரித்தல் என்­ப­வற்றை ஒரு சிறிய குழுவே மேற்­கொண்டு வரு­கி­றது. நாட்டில் இவ்­வா­றான சம்­ப­வங்­களை எந்த இனத்­த­வரும் விரும்­ப­வில்லை. அடிப்­படைவாத சிறு குழுவே இதன் பின்­ன­ணியில் இருக்­கி­றது. கடந்த தேர்­தலில் போட்­டி­யிட்ட அவர்கள் படு­தோல்­வி­ய­டைந்­தார்கள்.

மக்கள் அவர்­களை நிரா­க­ரித்­தார்கள். இந்த இன­வாத குழு­வுக்கு சில அர­சியல் வாதிகள் பெற்றோல் வழங்­கு­ப­வ­ராக செயற்­ப­டு­கின்­றார்கள். அர­சியல் வாதி­களே அவர்­களின் செயல்­க­ளுக்கு பெற்றோல் ஊற்­று­கின்­றார்கள். அர­சாங்கம் இவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கத் தவற மாட்­டாது. 

தொல்­பொருள் விவ­காரம்
முஸ்­லிம்கள் தொல்­பொருள் பிர­தே­சங்­களை அழிக்­கி­றார்கள். தொல்­பொருள் காணி­களை அப­க­ரிக்­கி­றார்கள் என்று தொட­ராக குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கி­றதே? இதற்கு ஏன் அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது என்ற கேள்­விக்கு அமைச்சர் ராஜித சேனா­ரத்ன பதி­ல­ளிக்­கையில் ‘தொல் பொருள் விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடாத்தி தீர்வு பெறு­வ­தற்கு ஆணைக்­குழு அமைக்க முடி­யாதா? என்று கேட்­கி­றீர்கள்.

ஏற்­க­னவே தொல்­பொருள் விவ­காரம் தொடர்பில் பல ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அறிக்­கை­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தொல்­பொருள் திணைக்­க­ளமே இக்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் பொலிஸ் திணைக்­க­ளத்­துடன் இணைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் நட­வ­டிக்கை எடுக்­காதுவிடின் பொலி­ஸா­ருக்கு எதி­ராக முறை­யி­டலாம். 

ARA.Fareel

No comments

Powered by Blogger.