Header Ads



நாட்டிற்குள் நடக்கும் வன்முறைகளை, முஸ்லிம்களினால் தீர்க்க முடியாது - புபுது ஜாகொட

நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் சபையினால் தீர்க்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதனை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை முற்போக்கான சமூக சக்திகள், இடதுசாரிகள் மற்றும் திட்டமிட்டு பணியாற்றும் மக்கள் சக்திகளால் மாத்திரம் தீர்க்க முடியும்.

ஒரு மாத காலத்திற்குள் பல்வேறு வன்முறைகள். இவற்றுக்கு அடிப்படைவாத ரீதியில் பதிலளிக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. முஸ்லிம் அடிப்படைவாதம் பிரச்சினையை உக்கிரமடைய செய்யும். முஸ்லிம் அடிப்படைவாதத்தின் உதவியுடன் இந்த பிரச்சினை தீர்க்க முயற்சிக்க வேண்டாம்.

முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களை வலுப்படுத்த வேண்டாம். மக்கள் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டாம்.

சமூகத்தில் இருக்கும் முற்போக்கு சக்திகள், இடதுசாரி மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு நாம் முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவர்கள் தற்போது தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். வன்முறைக்கு வன்முறையால் பதிலளிக்க வேண்டாம்.

நாட்டில் இருக்கும் முற்போக்கு, இடதுசாரி, லிபரல் கொள்கையை கொண்டுள்ளவர்களை இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கோருகிறோம். அனைவருடனும் இணைந்து கூட்டு மக்கள் சக்தியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. எல்லோரும் முஸ்லிம்களுக்கு advice பண்ணுங்க , மாறாக பொதுபலசேனா, ராவணாபலய, சிங்களேய போன்ற அமைப்பினருக்கு அறிவுரை வழங்காதீர்கள்.
    இருந்தாலும் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்ற தங்களின் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  2. '(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”'
    (அல்குர்ஆன் : 3:26)
    www.tamililquran.com

    ReplyDelete
    Replies
    1. இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க இறையாட்சிக்கு முன்னான இறுதிச் சந்தர்ப்பம் JVP, TNA மற்றும் ACJU கூட்டான ஓர் அரசாகவே இருக்கும்!

      Delete
  3. இவர் கூறுவதே யதார்த்தம். முஸ்லிம்கள் இடதுசாரிகளோடு பயணிப்பதே காலத்தின் தேவை. Jvp போன்ற கட்சிகளில் வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் களம் காணவேண்டும்.

    ReplyDelete
  4. இவர் என்ன சம்பிரதாய முஸ்லிம்கள் என்று விழிக்கிறார் நான் நினைக்கிறேன் இந்த கபுறு வணங்கிகளை கூறுகிறார் என்று

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் அங்கு அடங்கப் பட்டிருப்பவர்களுக்காகப் பிரார்த்திப்பவர்கள் என்பதை உங்களால் எவ்வாறு மறுக்க முடியும்?

      அடிப்பட்டுக் கொண்டிருப்பதெல்லாம் இந்தப் பிரிவினை, எதிர்மறை எண்ணங்களால்தான்.

      Delete

Powered by Blogger.