Header Ads



கட்டாருக்கு பிரியாவிடை கொடுக்க, அரபு நாடுகள் திட்டமா..?

சவூதி அரேபியா மற்றும் ஏனைய அரபு நாடுகள் கட்டார் மீது மேலும் தடைகளை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரஷ்யாவுக்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இதில் தனது வர்த்தக நட்பு நாடுகளுக்கு கட்டார் அல்லது தம்மை தேர்வு செய்ய அழுத்தம் கொடுக்கவும் இந்த அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன.

கார்டியன் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கும் ரஷ்யாவுக்கான தூதுவரான ஒமர் கொபாஷ், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலில் இருந்து கட்டாரை வெளியேற்றியது மாத்திரம் அந்த நாட்டின் மீதான தடையாக இருக்காது என்று கூறியுள்ளார்.

“குறிப்பிட்ட பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து தற்போது நாம் ஆலோசித்து வருகிறோம். இதில் வர்த்தக நட்பு நாடுகளிடம் எம்மை ஆதரிப்பது குறித்த அழுத்தம் கொடுக்கவும் சாத்தியம் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்திருக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி, பஹ்ரைன் மற்றும் எகிப்து நாடுகள் கட்டார் மீது அசாதாரண நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

கட்டார் இந்த நிபந்தனைகளை ஏற்க முன்வராவிட்டால் கட்டாருக்கு பிரியாவிடை கொடுக்கப்படும் என்று கொபாஷ் கூறினார். 

No comments

Powered by Blogger.