Header Ads



ஞானசாரரும், சம்பிக்க ரணவக்கவும் ஒன்றாக இருக்கின்றனர்

அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடந்த 19ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபலசேனா அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி பல பொய்களை தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது பேச்சில் இரண்டு இடங்களில் தனது பெயரை கூறியுள்ளதால், அவரது பொய்யை சுட்டிக்காட்டுவது தனது கடமை எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொதுபலசேனாவுடன் மோதல் இருப்பதாக காட்ட என்னுடைய பெயரை இணைத்து கொண்டால், கசப்பான உண்மைகளை வெளியிட நேரிடும் என நான் ஏற்கனவே சம்பிக்க ரணவக்கவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

தற்போது அவரது தோலை உரித்து காட்ட நேரிடும். எனினும் அரசியல் தர்மத்தை காக்க வேண்டும் என்பதால், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உள்விவகாரங்கள் எதனையும் நான் வெளியிட போவதில்லை. மூன்றாம் தரப்பு அறிந்த விடயங்களை மாத்திரமே நான் வெளியிடுவேன்.

எனது சட்டத்தரணி, ஞானசார தேரரின் சட்டத்தரணி என சம்பிக்க கூறுகிறார். எனினும் சட்டத்தரணி மனோஹர டி சில்வா, ஞானசார தேரருக்கு மாத்திரமல்ல, சம்பிக்க ரணவக்கவுக்கும் சட்டத்தரணி.

சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் அவர் இலவசமாக வாதாடினர். மேலும், ஜாதிக ஹெல உறுமய தாக்கல் செய்த சுனாமி நிவாரண சபை, 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளில் மனோஹர டி சில்வா இலவசமாக வாதாடினார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் ஞானசார தேரர் ஆகியோரின் சட்டத்தரணி ஒருவர் என்பதால், ஞானசார தேரர், மகிந்த அணியில் இருப்பதாக சம்பிக்க ரணவக்க வாதிட்டுள்ளார்.

எனது வழக்குகள் மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் சில்வா ஆஜராகிறார். இந்த சட்டத்தரணியே ஷிராணி பண்டாரநாயக்கவின் சார்பிலும் ஆஜராகிறார்.

சம்பிக்கவின் தர்க்கத்திற்கு அமைய பார்த்தால், கோத்தபாய ராஜபக்சவும் ஷிராணி பண்டாரநாயக்கவும் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஞானசார தேரரின் வழக்குகளில் ஆஜராகும் சட்டத்தரணியே சம்பிக்க ரணவக்கவின் வழக்குகளிலும் ஆஜராவதால், அவரது கூற்றுப்படி ஞானசார தேரரும், சம்பிக்க ஒன்றாக இருக்கின்றனர் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Neenga aditchikkidda unmaihal velivarum

    Allah kareem

    ReplyDelete

Powered by Blogger.