Header Ads



சவூதி அரேபியாவில் இருந்து கட்டார் ஒட்டகங்களும், ஆடுகளும் உடன் வெளியேற வேண்டும்

கட்டார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை காரணமாக கட்டார் நாட்டவர்களுக்கு சொந்தமான ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் தமது மேய்ச்சல் நிலங்களில் இருந்து உடன் வெளியேற்றப்பட வேண்டும் என்று சவூதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

சுமார் 15,000 ஒட்டகங்கள் மற்றும் 10,000 ஆடுகள் ஏற்கனவே எல்லை கடந்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கட்டார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளுக்கு குடிநீர் டாங்கிகள் மற்றும் உணவுகளுடன் தற்காலிக முகாம் ஒன்றை கட்டார் அமைத்துள்ளது.

சிறிய வளைகுடா நாடான கட்டாரில் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால் பெரும்பாலான கட்டாரியர் தமது கால்நடைகளை சவூதி அரேபியாவில் வைத்துள்ளனர்.

கட்டார் தீவிரவாதத்திற்கு உதவுவதாக குற்றம்சாட்டி சவூதி மற்றும் ஒருசில அரபு நாடுகள் அந்த நாட்டுடனான இராஜதந்திர மற்றும் அனைத்து போக்குவரத்து உறவுகளையும் இந்த மாத அரம்பத்தில் துண்டித்தது.

கட்டார் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை தடுக்கும் சவூதியின் புதிய நடவடிக்கை கட்டார் மேய்ப்பாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.