Header Ads



கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான, வருடாந்த இஸ்லாமிய மாநாடு

நாம் வாழ்கின்ற அன்றாட சூழல் தம்மைப்பற்றிய சுய மதிப்பீட்டினை வேண்டிநிற்கின்றது. அதிலும் குறிப்பாக இன்றைய இலங்கை சூழலிலே இதுபற்றிய விளக்கம், அறிவு இன்றியமையாததாக மாறியிருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாத்தின் பார்வையில் தாய்நாடு, அதன் மீதான பாசம் என்பனவற்றை நாமும் அறிந்து, எமது வாழ்க்கையில் மிகச்சரியாக எடுத்து நடக்க வேண்டிய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

அந்த வகையிலே இக்குறையினை நிவர்த்திக்கும் வகையில் கத்தார் மண்ணிலே துறைசார் நிபுணர்களைக் கொண்டு வருடாந்த இஸ்லாமிய மாநாட்டினை அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மஃமூத் இஸ்லாமிய கலாச்சார நிலையம் எதிர்வரும் 17-ந் திகதி (சனிக்கிழமை) அஸர் தொழுகை முதல் இஷாத் தொழுகை வரை அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மஃமூத் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் (FANAR) ஏற்பாடு செய்திருக்கிறது. பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனோடு இப்தார் மற்றும் இராப்போசனமும் ஏற்பாட்டாளர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியானது பல தரப்பட்ட நபர்களையும் சென்றடைய வேண்டுமென்ற நோக்கில் தமிழ்மொழியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

குடும்ப சகிதம் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


No comments

Powered by Blogger.