Header Ads



நாட்டுக்காக பேசுவது, தற்போது இனவாதமாக மாறியுள்ளது.

அரசாங்கம் இனவாதத்தை அடக்க வேலைத்திட்டம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், எனினும் எதிர்க்கப்பட வேண்டியது இனவாதமல்ல இன பேதமே எனவும் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனவாதம் என்ற சொல்லுக்கான அர்த்தம் அகராதியிலும் இல்லை. அரசியல்வாதிகள் இந்த வார்த்தையை உருவாக்கினார். நாட்டுக்காக பேசுவது தற்போது இனவாதமாக மாறியுள்ளது.

சோமவங்ச அமரசிங்க போன்ற தலைவர்கள் உயிருடன் இருப்பார்களாயின் அரச வளங்களை விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்திருப்பார்கள்.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் தான் நாட்டுக்காக நான் குரல் கொடுப்பேன். நீதியையும், நியாயத்தை கோரி மக்கள் போராட வேண்டும் எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பொறுப்பு வாய்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நன்கு திட்டத்தை தீட்டி நாட்டை ஆட்சி செய்யும் அதற்கான சகல துறை சார்ந்த ஆலோசகர்கள் இருக்கிறார் அதையும் தான்டி தவறு நடந்தால் எதிர்க்கட்சி தட்டிக் கேட்கும் இதை எல்லாம் தான் அரசாங்கத்தின் விடயங்களில் மூக்கை நுளைப்பதற்கு இந்த மத குருக்களுக்கு என்ன தேவை? மத குருக்களின் வேலை வழி தவறிச் செல்லும் மக்களை மனதவில் முயற்சிகள் செய்து நேர் வழிப்படுத்துவதுதான்,இதுவரை இந்த தேரோக்கள் எத்தனை கள்ளனை திருத்தினார்கள்.எத்தனை சாராயம் குடிகாறனை திருத்தினார்கள்.எத்தனை கஞ்சா குடிப்பவனை திருத்தினார்கள்.எத்தன போதப் பொருக்கு அடிமையானவனை திருத்தினார்கள்.எத்தனை கடத்தல் காறனை திருத்தினார்கள்,எத்தனை கள்ளக்காதல்.விபச்சிரகனை கற்பழிப்பனை திருத்தினார்கள் இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம் எவனாவது இவர்களின் அறிவுரையும் திருந்தவும் இல்லை திருந்தும்படியான பிரச்சாரமோ.ஏற்பாடுகளோ ,அதற்கான முயற்சிகளோ கிடையாது.இவர்களுக்கு அரசாங்கம் சம்மந்தமான தங்களுக்கு தேவை இல்லாத வேலையில் மூக்கை ஓட்டுகிறார்கள்,அரசாங்கம் யாரை எங்கு வௌக்க வேண்டுமை அவனை அங்கே வைக்காத பிரச்சினையால் நாடு குட்டிச் சுவராக மாறி இருக்கிறது,

    ReplyDelete

Powered by Blogger.