Header Ads



பொதுபல சேனாவின் இயக்குனர்தான், சம்பிக்க ரணவக்க

பொதுபல சேனாவின் இயக்குனர் தான் என்ற உண்மையை சம்பிக்க ரணவக்க மறைமுகமாக அவராகவே ஒத்துக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை பொலிசார் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால்,அவரை அமைச்சர் சம்பிக்கவே மறைத்து வைத்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறியிருந்தார். அமைச்சர் சம்பிக்கவோ, நான் ஞானசார தேரரை மறைத்து வைக்கவில்லையென உடனடியாக தனது மறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அம் மறுப்பில் ஆரம்ப காலத்தில் தாங்களும் பொது பல சேனா அமைப்பும் இணைந்து செயற்பட்டது உண்மை தான். தற்போது அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளார். இவரின் இக் கூற்றானது முஸ்லிம்களின் பல நாள் வினாக்களுக்கு பதில்களை வழங்குகின்றன.

பொது பல சேனா அமைப்பானது முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதியிலேயே தோன்றியிருந்தது. அவர்கள் தங்களது அமைப்பை ஆரம்பித்த நாள் தொட்டு முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கையே  பிரதான செயற்பாடாக கொண்டிருந்தார்கள். பிரதான செயற்பாடு என்பதை விட தங்களது முழு நேர செயற்பாடாக செய்து கொண்டிருந்தார்கள் என்றாலும் தவறாகாது. இப்படி இருக்கையில் ஆரம்ப காலத்தில் தான் குறித்த அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக அமைச்சர் சம்பிக்க கூறுவதானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடைய காலத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளின் பின்னணியில் இவர் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது.

முன்னாள் ஜனாதிபதி உட்பட பலரும் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அமைச்சர் சம்பிக்க அவரை கைது செய்யவிடாமல் தடுத்தார் என்று பகிரங்கமாக பல தடவைகள் கூறியுள்ளனர். இவை எவற்றுக்கும் இதுவரை மறுப்பு தெரிவிக்காத அமைச்சர் சம்பிக்க இதற்கு விழுந்தடித்து வந்து மறுப்பு தெரிவித்துள்ளதானது அவர்களின் கூற்றுக்களில் உள்ள உண்மைகளை வெளிக்காட்டுகிறது.

பொது பல சேனா அமைப்பானது அரசியல் இலாபம் கருதி ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்பதில் எந்த வித சிறு சந்தேகமுமில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முந்தியடித்துக் கொண்டு அமைச்சர் சம்பிக்க ஜனாதிபதி மைத்திரியின் பக்கம் சென்றிருந்தார். ஆரம்ப காலத்தில் இவர்களுடன் இணைந்து அவர் செயற்பட்டதையும் அவரே ஏற்றுக்கொள்கிறார். இவற்றை வைத்து கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கவிழ்க்க ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே பொது பல சேனாவாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. அதெல்லாம் சரி இப்ப என்ன செய்றது.முடிந்தால் முஸ்லீம்களில் அக்கறை இருந்தால் திறந்த மனதுடன் இதை நாட்டுமக்களுக்கு குறிப்பாக சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. 100% true. Now ppl realising the truth.

    ReplyDelete
  3. இந்த பரதேசிதான் சிங்கள இனவாதத்தின் இயக்குனர் என என்போன்றோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்... ஆனால் இதன் பின்னால் "ராஜிதவும்" உள்ளான் என்பது இப்போதுதான் தெரிகிறது... அவனது நயவஞ்சகத்தனம் இப்போதுதான் புரிகிறது! முஸ்லிம்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொண்டு அவன் சாதித்துவிட்டான்! மஹிந்தவைவிட இவர்கள் எவ்வளவோ ஆபத்தானவர்கள்! முஸ்லிம்களுக்கு "அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைதான்!"

    ReplyDelete

Powered by Blogger.