June 08, 2017

இஸ்லாமிய உலக நெருக்கடி, மனமுருகி பிரார்த்தியுங்கள், ஒற்றுமைப்பட முஸ்லிம் நாடுகளுக்கு கடிதம்


-விடிவெள்ளி-

சவூதி அரே­பியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய நாடுகள், கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் தமது நாடு­களின் உள்­ளக விவ­கா­ரங்­களில் தலை­யி­டு­வ­தா­கவும் குற்றம் சுமத்தி அந்­நாட்­டு­டனான இரா­ஜ­தந்­திர தொடர்­பு­க­ளையும் தரை மற்றும் வான்­வழிப் போக்­கு­வ­ரத்­து­க­ளையும் துண்­டித்துக் கொண்­டுள்­ள­மைக்கு கவலை வெளி­யிட்­டுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை சம்­மந்­தப்­பட்ட நாடு­களை ஒற்­று­மைப்­ப­டுத்தும் முயற்­சி­களில் ஈடு­ப­டு­மாறு ஏனைய அனைத்து முஸ்லிம் நாடு­க­ளையும் கோர­வுள்­ளது. 

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை இந்தக் கோரிக்­கையை கடிதம் மூல­மாக விடுக்­க­வுள்­ள­தா­கவும் இவ்­வாரம் கடி­தங்கள் அனுப்­பி­வைப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். 

உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கட்டார் விவ­காரம் தொடர்பில் தெரி­விக்­கையில், 

கட்­டா­ருடன் இரா­ஜ­தந்­திர உற­வு­களைத் துண்­டித்துக் கொண்­டுள்ள பஹ்ரைன், சவூதி அரே­பியா, அரபு இராச்­சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடு­க­ளுக்கும் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. பிரச்­சி­னை­க­ளையும் முரண்­பா­டு­க­ளையும் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­ளு­மாறும் இல்­லையேல் முஸ்லிம் உலகம் முழு­வதும் பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் என்­ப­தையும் சுட்­டிக்­காட்­ட­வுள்ளோம். 

சம்­மந்­தப்­பட்ட நாடு­களை ஒற்­று­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான மாநா­டொன்­றினை நடத்­து­மாறும் ஏனைய உலக முஸ்லிம் நாடு­களை உலமா சபை கோர­வுள்­ளது. பாகிஸ்தான், இந்­தோ­னே­சியா, மலே­சியா, பங்­க­ளாதேஷ், துருக்கி, குவைத் உட்­பட பல நாடு­களின் தலை­வர்­க­ளுக்கு உலமா சபை கடி­தங்­களை அனுப்­பி­வைக்­க­வுள்­ளது. 

இஸ்­லா­மிய நாடு­களை மையப்­ப­டுத்தி இஸ்­லாத்­துக்கு எதி­ரா­ன­வர்கள் மேற்­கொள்ளும் சூழ்ச்­சியே தற்­போது அரங்­கேறி வரு­கி­றது. இந்­நி­லைமை இஸ்­லா­மிய உலகை சின்னா பின்­ன­மாக்கி அழித்து விடு­வ­தாக அமையும். முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யி­ன­ராக வாழும் இலங்கை போன்ற நாடுகள், முஸ்­லிம்கள் பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும்.

தற்போது இஸ்லாமிய உலகில் தோன்றியுள்ள நெருக்கடியான  நிலைமை சுமுகமாக தீர்க்கப்பட்டு விடுவதற்கு இந்தப் புனித ரமழான் மாதத்தில் நாமனைவரும் மனமுருகி பிரார்த்தனை புரிய வேண்டும் என்றும் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

7 கருத்துரைகள்:

May Allah swt accept the efforts of ACJU. Haters will give negative comments. Don't bother about it. Carry on your work with sincerity.

நீங்க கடிதம் அனுப்புவதற்கு முன்னதாவே அவர்கலின் பிரச்னை முடிந்து விடும்

அல்லாஹு தஆலா உங்கள் ஒற்றுமை முயற்சிகளை அங்கீகரிப்பானாக !!!

May Allah swt accept your efforts and bring peace in Middle east.

Lanka la iwwalaw pirachina nadakkuzu...azukke letter wara late achi...izukku quick a letter vandiche...ACJU is very fast

பொதுவாக உலகில் எத்தனையோ அமைப்புகள் இருந்தும்

குறிப்பாக இலங்கையில் இத்தனை அமைப்புகள் இருந்தும்

இந்த ஒரு அமைப்பாவது முயற்சி எடுக்கிறதே அதை ஊக்கப்படுத்துவதை விடுத்து...

We should stay with Ulama
Other muslim countries collapsed by
Separation of publics and Ulamas

Post a Comment