Header Ads



அமைச்சர் ரிசாத் - யாழ்ப்பாணம் மீலாத் குழு சந்திப்பு


யாழ் மீலாத் விழா அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக யாழ் மீலாத் குழு அமைச்சர் ரிசாத் அவர்களை 2017 ஜுன் முதலாம் திகதி  சந்தித்தது. இச்சந்திப்பில் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் செயலாளர் ஜனாப் முயீனுத்தீன் அவர்களும் கலந்து கொண்டார். 

இச்சந்திப்பில் மீலாத் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குதல், பயனாளிகளைத் தெரிவு செய்தல், பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்தல், வீதிகளைத் திருத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

வேலைத் திட்டங்களை மிகவிரைவில் ஆரம்பிப்பதற்கு  முதல் கட்ட திட்டமிடல் பணிகளை செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் திட்டத்தை சகல அடிப்படை வசதிகளும் கொண்ட வகையில் செயற்படுத்த அமைச்சர் திடசங்கட்பம் கொண்டுள்ளார்.   

இச்சந்திப்பில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் செய்ய வேண்டிய மீலாத் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. 

நாம் திட்டமிட்டபடி மீலாத் அபிவிருத்தித் திட்டங்கள் எமக்கு கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்....


6 comments:

  1. தற்போதையா சூழ்நிலையில் வடமாகணம் தவிர்ந்த எந்த மாகணத்தின் தலைநகரிலும் மீலாத் விழாவை நடத்தமுடியாத இனவாத சூழல் கணப்படுகின்றது.ஆனாலும் இவர்கள் சிங்களவர்களின் விசுவாசிகள்.

    ReplyDelete
    Replies
    1. சிங்கள விசுவாசிகள் இல்லை, அரச விசுவாசிகள். அதுவும் நடிப்பு தான்.

      அப்போ தான் விழும் குட்டுகளை குறைக்கலாம், ஏதோ அங்க இங்க சலுகைகளும் சுறுட்டி கொள்ளலாம்.
      Good strategy.. keep it up.

      தமிழர் ஆதரவு ஜெனிவா தீர்மானங்களை எதிர்க்க மகிந்த அரசுக்கான முஸ்லிம்கள் பட்டபாடு, அப்பப்பா...சிங்களவர்களே தோற்றுபோவார்கள்.

      மகிந்த அரசு விசுவாசிகள் கடைசியில் இதனால் என்னத்தை தான் சாதித்தாரகள், தமிழர் வெறுப்பை சம்பாதித்ததை தவிர.

      Delete
    2. நாம் ஜெனிவா சென்றால் தேசதுரோகிகள்.இப்ப இவர்கள் யார்??

      Delete
  2. மீரானிய காலேஜில் சர்பத் குடுள்பீங்களா?

    ReplyDelete
  3. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசசம் என்பதாலும் மீள் குடியேற்றம் ஊக்குவிக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்தாலும் மேலதிக நிதி அரசிடமிருந்து கோரப்படவேண்டும்!

    ReplyDelete
  4. மீலாத் நிகழ்வை முன்னிட்டு வட மாகாண முஸ்லிம்களுக்கான ஸகாத் நிறுவனம் ஆரம்பிக்கப்பட வேண்டும் .இதன் மூலம் தொடராக அந்த மக்களின் தேவைகள் கவனிக்கப்பட வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.