Header Ads



கத்தார் தடைக்கு, அமெரிக்காவே காரணம் - ஈரான் குற்றச்சாட்டு

கத்தார் மீது சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தனர். மேலும், தீவிரவாதத்துக்கு துணைபுரிவதாக கத்தார் மீது பல தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் வளைகுடா நாடுகள் மத்தியில் குழப்பமும், பதற்றமும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த அத்தனைப் பிரச்னைகளுக்கும் அமெரிக்கா மட்டும் தான் காரணம் என ஈரானின் மூத்த தலைவர் அயோடோலா அலி கமெனேய் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து அயோடோலா அலி கமெனேய் அவர்களின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 

‘வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம். ஐஎஸ் இயக்கத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கூறுவது வெறும் பொய்’ எனக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. மேலும், ஐஎஸ் இயக்கம் என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்காதான் என்றும் கமெனேய் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான்-அமெரிக்காவின் தொடர்பு 1979 முதல் பிரிந்தே உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித உறவும் இதுவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஆடு நனையிது என்று ஓனாய் அழுகின்றது

    ReplyDelete

Powered by Blogger.