Header Ads



நாங்கள் உயிரோடு இருப்பதற்கு, முஸ்லிம்களே காரணம் - பிரித்தானியர்கள் உருக்கம்

இங்கிலாந்து தலைநகரம் வடக்கு கென்சிங்டனில் உள்ள 24 மாடி குடியிருப்பில் நேற்று தீ பிடித்தது. இதில், அடியில் உள்ள 4 மாடிகள் தவிர அனைத்து மாடிகளும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் இதுவரை 12 பேர் இறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 74 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மொத்தம் 120 வீடுகள் இருந்தன. தீ விபத்து நடந்த போது, 500 பேர் வரை வீடுகளில் இருந்ததாக தெரிகிறது. இவர்களில் ஏராளமானோர் உயிர் தப்பி உள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. மொத்தம் உள்ள 24 மாடிகளில் அடியில் உள்ள 4 மாடிகளில் அலுவலகங்கள், சமூக கூடங்கள் செயல்பட்டு வந்துள்ளன. அதற்கு மேல் உள்ள 20 மாடிகளிலும் குடியிருப்புகள் இருந்துள்ளன.

கட்டிடத்தின் 8-வது மாடியில்தான் முதலில் தீ பிடித்துள்ளது. பின்னர் தீ கட்டிடம் முழுவதும் பரவி உள்ளது. அதிகாலை 1.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அனைவரும் வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் தீ விபத்து ஏற்பட்டது பலருக்கு தெரியவில்லை.

ஆனால், இந்த குடியிருப்பில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் பலர் ரம்ஜான் நோன்பு இருந்தனர். அவர்கள் ரம்ஜான் உணவு தயாரிப்பதற்காக விழித்திருந்தார்கள். கட்டிடத்தின் அருகில் மசூதி ஒன்று உள்ளது. அங்கும் உணவு தயாரிக்கும் பணியில் பலர் ஈடுபட்டு இருந்தனர்.

இவர்கள் விழித்திருந்ததால் கட்டிடத்தில் தீ பிடித்ததும் இவர்களுக்கு தெரிய வந்தது. உடனே கட்டிடத்தில் இருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தவர்களை கதவை தட்டி எழுப்பினார்கள். பலரை கீழே கொண்டு வருவதற்கு உதவினார்கள். இதனால் தான் ஏராளமானோர் உயிர் பிழைக்க முடிந்தது.

இது சம்பந்தமாக விபத்தில் தப்பிய பெண் ஒருவர் கூறும் போது, நாங்கள் இங்கே உயிரோடு இருப்பதற்கே முஸ்லிம் வாலிபர்கள் தான் காரணம். தீ பிடித்தது பற்றி தெரிந்ததும் ஒவ்வொரு மாடிக்கும் ஓடி வந்து எங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி காப்பாற்றினார்கள் என்று கூறினார்.

இந்த கட்டிடத்தின் 8-வது மாடியில் காலிப் சுலைமான் அகமது (வயது 20) என்பவர் குடியிருந்தார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

நான் எனது வீட்டில் அத்தையுடன் குடியிருந்து வந்தேன். நான் ரம்ஜான் நோன்பு இருந்ததால் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது ஏதோ எரிவது போன்ற வாசனை வந்தது. எனவே ஜன்னல் வழியாக வெளியே எட்டி பார்த்தேன். அப்போது 7-வது மாடி எரிந்து கொண்டு இருந்தது.

உடனே எனது அத்தையை எழுப்பி தப்பி செல்லும்படி கூறினேன். பின்னர் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கெல்லாம் சென்று கதவை தட்டி எழுப்பி வெளியேற செய்தேன்.

ஆனால், கீழே வரும் பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருந்தது. பலரும் தப்பிப்பதற்கு தேவையான உதவிகளை செய்தேன் என்று கூறினார்.

5 comments:

  1. Jazakallah kaira, may Allah bless you

    ReplyDelete
  2. அல்லாஹ்தான் முஸ்லிம்களை நோன்பு நோற்கச்செய்தான்... எனவே நீங்கள் உயிர்வாழ (முஸ்லிம்கள் மூலமாக) அல்லாஹ்வே காரணம்!

    ReplyDelete
  3. Almighty Allah will provide many more rewards to this brother for his efforts and sacrifices in this month of Ramzan Mubarak

    ReplyDelete
  4. Masha Allah. What an exemplary show by the Muslims to get a good name. May Allah reward those Muslims

    ReplyDelete

Powered by Blogger.