Header Ads



நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவராது பேசினால், நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்

நாட்டில் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு சக்திகள் செயற்படுவதாகவும் டொலர்களை நம்பி வாழும் இவர்கள் நல்லிணக்கத்தை இல்லாமல் செய்து வருவதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

விகாரைகளை பாதுகாப்பது மற்றும் புத்தசாசனத்தின் முன்னேற்றம் குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடினேன். பல்வேறு சக்திகள் உருவாகி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க தேவையற்ற பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

இவற்றால் நல்லிணக்கத்திற்கு தடையேற்படும். அத்துடன், தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடினோம்.

மேலும், தேசிய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் எவராது பேசினால், நாங்கள் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. சரி ஐயா சரி நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும்மையா.

    ReplyDelete
  2. நாடகமெல்லாம் கண்டோம் உந்தன் மொழியிலே ஆடும் விழியிலே.

    ReplyDelete
  3. 2020 தேர்தல் வரும் உன் தலைவன் ரணிலுக்கு சொல்

    ReplyDelete
    Replies
    1. @IK MS, ரணில் அதிக மினிஸ்டர் பதவிக்களும் இப்தார் விருந்துகளும் தருவதாக உறுதியளித்தால், அப்போ என்ன செய்வீகள்?

      Delete
  4. Let us hear some more jokes,

    ReplyDelete

Powered by Blogger.