Header Ads



இலங்கையில் பிளாஸ்டிக், கோழி முட்டைகள்..?


இலங்கையில்  பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டப் பிரதேசங்களில் தற்போது போலி முட்டைகள், அதாவது பிளாஸ்டிக் முட்டைகள் மற்றும் காலாவதியான முட்டைகளும் தாராளமாக கிடைக்கின்றன, என்றும், முட்டைகளை வாங்கும் போது அவதானமாக இருக்குமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.