Header Ads



நோன்பு காலம் எங்களுக்கு, மிகவும் பிடித்தமானது - துஷ்யந்த் சிங்

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள், ரமலான் மாதத்தில் அங்கு இயல்பாக இருக்க முடியுமா? முடியாதா? என்பதை தெரிந்து கொள்ள  முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஆர்வம் இருக்கும்.

வளைகுடா நாடுகளில், நோன்பு காலத்தில் பொது இடங்களில் உணவு உண்பதும், பானங்கள் அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது, 

ஏனெனில் இஸ்லாமிய நாடுகளில் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால், தவிர்க்க முடியாத காரணம் இல்லாத பட்சத்தில், ரமலான் நோன்புகள் அனைத்தையும் தவறாமல் வைப்பார்கள். அங்கு கட்டுப்பாடுகளும் அதிகம்.

இதுபோன்ற நிலைமையில், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினர் வேலைக்காக அங்கு சென்றவர்களாகவே இருப்பார்கள். நோன்பு காலமான முப்பது நாட்களும் அவர்களின் அன்றாட உணவு பழக்கம் எப்படி இருக்கும்?

துபாயில் `சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரியும் துஷ்யந்த் சிங், முஸ்லிம் அல்லாதவர்களின் நிலை குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்கிறார்.

இந்தியாவில் புலந்த்ஷகரைச் சேர்ந்த துஷ்யந்த், மூன்று ஆண்டுகளாக துபாயில் பணிபுரிகிறார்.

"அதிகாலையில் நோன்பு தொடங்கிய பிறகு, நாங்கள் காபி, டீ அல்லது உணவுப் பொருட்கள் எதையும் எடுத்துக் கொண்டு பொது இடத்திற்கு வரமுடியாது."

வெளியிடங்களில் உணவுப் பொருட்கள் விற்பதற்கும், உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலையில் நோன்பு துவங்கிய பின்பும், மாலையில் நோன்பு துறப்பதற்கு முன்பும், எங்கள் அறைக்குள் தான் சாப்பிடவேண்டும்.

பொது இடங்களில் சாப்பிடுவது மட்டுமல்ல, சிகரெட் புகைப்பதும், குளிர்பானம் அருந்துவதும்கூட தடை செய்யப்பட்டது.

உணவகங்களுக்கு உள்ளே சென்றும் சாப்பிடமுடியாது, ஆனால் அவை மூடியிருக்காது. அங்கிருந்து உணவுகளை வாங்கிக்கொண்டு வீட்டில் வைத்து சாப்பிடலாம்.

சில உணவகங்களில் உள்ளே அமர்ந்து சாப்பிடலாம், ஆனால், வெளியில் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.

இந்தக் கட்டுப்பாடுகளால் எங்களுக்கு பிரச்சனைகள் ஏதும் இல்லை. சொல்லப்போனால், நோன்பு காலம் எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. எங்களது வேலை நேரமும் குறைந்துவிடும்.

நோன்பு வைத்திருப்பவர்களின் முன் சாப்பிட நாங்களும் விரும்புவதில்லை. தவறுதலாக, சாப்பிட்ட கையோடு அவர்கள் முன் சென்றுவிட்டால், அது எங்களுக்கு உறுத்தலாக இருக்கும் என தெரிவிக்கிறார் துஷ்யந்த்.

No comments

Powered by Blogger.