Header Ads



உதய கம்மன்பிலவுக்கு, முஜிபுர் ரஹ்மான் சவால்

மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியல்வாதியாக இருந்தால், பொதுபல சேனா அமைப்பு பற்றி தான் அறிந்த சகல விடயங்களையும் அம்பலப்படுத்துமாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -20- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுபல சேனா பொய்க்கூறினால், உண்மையை வெளியிட போவதாக உதய கம்மன்பில கூறியுள்ளார்.

கம்மன்பில பொதுபல சேனாவின் ஊடகப் பேச்சாளர் என்பதால் இதனை கூறுகிறாரா என முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாதம், மத வாதம் உலகில் சகல நாடுகளிலும் இருக்கின்றது. அவற்றை சிறிய தரப்பினரே செய்கின்றனர். எனினும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில்தான் நாட்டில் இனவாத்திற்கு பணம் கொடுத்து பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ராஜபக்ச செய்த இந்த அழிவுக்கு அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இவர்கள் தான் இனவாதத்தின் உரிமையாளர்கள்.

பொதுபல சேனா பொய்க் கூறினால், உண்மைகளை வெளியிட போவதாக உதய கம்மன்பில கூறுகிறார். அவர் பொதுபல சேனாவின் ஊடகப் பேச்சாளராக மாறியுள்ளார்.

உண்மையான தேசப்பற்றுள்ள அரசியல்வாதி போல் மக்களிடம் தலா 100 ரூபாவை சேரித்து மக்களுக்கு பொறுப்புக் கூறுவதாக தெரிவித்து தேர்தலில் போட்டியிட்டார். அன்று அப்படி கூறியவர் தற்போது வேறு கதைகளை பேசி வருகிறார்.

மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசியல்வாதியாக இருந்து உண்மையை வெளியிடலாமே. அவர் உண்மையை கூறவேண்டும். ஏன் மூடி மறைக்கின்றார்.

முடிந்தால் உண்மையை கூறுமாறு நாங்கள் சவால் விடுக்கின்றோம். அப்போது எது உண்மை என்பதை எம்மால் அறிந்து கொள்ள முடியும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.