Header Ads



சவூதியை விமர்சிக்காத எர்துகான், கத்தாரை நண்பர்கள் என்கிறார்

சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துருக்கி தலைநகர் அங்காரவில் கத்தார் மீதான தடை குறித்து அதிபர் எர்டோகன் பேசும்போது, "கத்தார் மீதான வளைகுடா நாடுகளின் தடை நல்லதல்ல என்று நாங்கள் நினைக்கிறோம். கத்தாரை தனிமைப்படுத்துவதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படாது. எங்களது துயரமான நேரங்களில் எங்களுக்கு கத்தார் நண்பர்கள் துணையிருந்துள்ளனர். கத்தாருடனான துருக்கியின் உறவு தொடரும்" என்றார்.

இதனையடுத்து, கத்தாருக்கு தேவையான உணவுப்பொருட்கள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கான ராணுவ உதவிகள் வழங்க துருக்கி முடிவு செய்துள்ளது. எனினும், எர்டோகன் சவூதி அரேபியாவின் நிலைப்பாடு குறித்த கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

1 comment:

  1. சவூதிக்காரன் சல்லி திமிறுல பேசுறான் .ஒரு முஸ்லீம் சகோதரோடு பிரச்சினை வந்தால் எவ்வாறு கையான்டு பிரச்சினையை தீர்க்க தெரியாத மடையர்கள் .

    ReplyDelete

Powered by Blogger.