Header Ads



கத்தாருக்கு சகல உதவிகளையும் செய்ய எர்துகான் உறுதி, 3000 துருக்கி படையினரும் நிறுத்தப்படுவர்

-Mohamed Jawzan-

துருக்கி கத்தாரில் அதன் இராணுவ தளத்தை அமைக்கும் வேலைகளை வேகமாக துரிதப்படுத்தும் சட்டத்தை நீதி மற்றும் அதன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆதரவடன் நிறைவேற்றும் வேலையை துரிதப்படுத்தி உள்ளதாக தெரிவித்தது.

வளைகுடாவில் அண்டை அரபு நாடுகளுடனான துருக்கியின் ராஜிய உறவு மற்றும் அதன் பெரிய பொருளாதார நாடுகளுடனான உறவு மிகவும் வலுவடைந்து வருவதாக துருக்கிய அதிகாரிகள் ராய்ட்டருக்கு தெரிவித்தனர்.

மேலும் கத்தாரில் அமைய இருக்கும் துருக்கிய இராணுவ தளத்தின் மூலமாக கத்தார் துருக்கிய படைகளின் இராணுவ பயிற்சி துருக்கிய படைகளை சேவையில் ஈடுபடுத்துதல் மற்றும் அதற்கான ஒத்துழைப்பு மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உறுதுணை பற்றி ஆலோசனைகளை 
நீதி மற்றும் அபிவிருத்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விவாதத்தில் எடுத்து கொள்ளப்பட்டதாக துருக்கிய அதிகாரி புதன்கிழமை அன்று ராய்ட்டருக்கு தெரிவித்தார்

மேலும் துருக்கி நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைப்படி இந்த ஒப்பந்த அடிப்படையில் 3000 துருக்கி படைகளை முதலில் கத்தார் இராணுவ தளத்தில் சேவையில் நிறுத்துவதாக கத்தாரின் அண்டை நாடுகளுடனான பிரச்சனைகள் தோன்றும் முன் 2015 இல் இந்த ஒப்பந்தம் கத்தாருடன் கைச்சாத்திட்டதாகவும் அதன் பிற்காலத்தில் இது நடைமுறையில் வந்ததாகவும் தெரிவித்தனர்

சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கத்தாருடன் தங்கள் ராஜிய உறவுகளை அன்மையில் முறித்து கொண்டது

இதற்காக கத்தார் அதன் அதிர்ப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு இருந்தது இதற்கு துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் அங்காரா கத்தார் மீதான இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர அதன் சக்தி அனைத்தையும் பயன்படுத்தி உதவ போவதாக அறிவித்து இருந்தார்

மேலும் கத்தாருடனான துருக்கிய நல்லுறவு மிகவும் பலாமாக இருப்பதாகவும் கத்தாருக்கு துருக்கி அதன் அனைத்து தேவைகளுக்கான உதவிகளை செய்யும் என்றும் துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் உறுதியாக தெரிவித்து இருந்தார்

மேலும் எகிப்திய இராணுவ ஆட்சி மாற்றம் ஏற்பட்டு போது வளைகுடா அரபு நாடுகளில் கத்தார் முஸ்லீம் சகோதரத்துவத்துக்கு தனது முழுமையான ஆதரவை அளித்திருக்கிறது என்பது குறிப்பிட்டதக்கது

3 comments:

  1. மாஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவி நினயாபுறத்தால் கிடைக்கும்

    ReplyDelete

Powered by Blogger.