Header Ads



ரமழானின் இறுதிப் 10 இல் அதிக நல்லமல்களில் ஈடுபடுவதுடன், பாதுகாப்பையும் மேற்கொள்வோம்


புனித ரமழான் மாதம் எம்மை வந்தடைந்து பல நாட்கள் கழிந்து விட்டன. இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதுதல், தான தர்மங்கள் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் முஸ்லிம்களாகிய நாம் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் அல்லாஹு தஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ரமழானின் இறுதிப் பத்தில் இஃதிகாப் இருத்தல், கியாமுல் லைலில் ஈடுபடுதல் போன்ற வணக்கங்களை நாம் அதிகமாக மேற்கொள்ள வேண்டும்.

ரமழானின் இறுதிப் பத்து தினங்களில் ஆண்கள் அதிகளவு மஸ்ஜித்களில் நேரங்களை கழிப்பதால் மஸ்ஜித்களுக்கும் ஏனைய முக்கியமான இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்ததாகும். மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் ஜம்இய்யாவின் கிளைகளும் பொலிஸ் மற்றும் உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து இவ்விடயத்தில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது. 

எல்லாம் வல்ல அல்லாஹ் இறுதிப் பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தக் கூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக. மேலும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலையைப் போக்கி, அச்சமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான தீய சக்திகளின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்;டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவானாக.
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக் 
பொதுச்  செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.