Header Ads



அமைச்சர்களின் மாற்றமும், அரசியல்வாதிகளின் பிரதிபலிப்புகளும்..!!

அமைச்சரவை மாற்றம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளி வந்திருந்தன. சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும், இவருடைய பதவி அவருக்கு கொடுக்கப்படும், இந்த அமைச்சருக்கு வேறு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என தொடர்ச்சியாக பல செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுத்து இன்று அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள 9 அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சில அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று ஜனாதிபதி செயலகத்தில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் சரத் பொன்சேகா, ஹர்ஷ டி சில்வா, கயந்த கருணாதிலக, தயா கமகே, மஹிந்த அமரவீர, கரு பரணவிதாரன, திலக் ஜானக மாரபன போன்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகா -

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவாக இதை பார்க்கின்றோம். இதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஹர்ஷ டி சில்வா -

எமக்கு புதிய அமைச்சர் கிடைத்துள்ளார். எதற்கும் தயாராக உள்ளோம்.

கயந்த கருணாதிலக -

எல்லா இடத்திற்கும் சென்று சேவை செய்யக்கூடிய வகையில் பதவி கிடைத்துள்ளது. பிரதமரினதும், ஜனாதிபதியினதும் முடிவை நினைத்து மகிழ்ச்சி

தயா கமகே -

மிகவும் நல்ல விடயம், நான் எந்த பதவிக்கும் எதிர்பார்க்கவில்லை.

மஹிந்த அமரவீர -

அமைச்சுப்பதவி இருக்கும் போதே மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ளது. மகிழ்ச்சியான விடயம், நாட்டுக்கு தேவையான ஒன்று.

கரு பரணவிதாரன -

ஜனாதிபதியின் தீர்மானமே இது. மங்களவுடன் கடமையாற்றியுள்ளளேன். எனக்கு யாருடனும் சேவை செய்ய முடியும்.

அஜித் பி பெரேரா -

தேவையான மாற்றமே ஏற்பட்டுள்ளது. புதிய மாற்றம் ஒன்றே ஏற்பட்டுள்ளது. புதியவர்களை நியமிக்காவிடினும் அனுபவமுள்ளவர்களை நியமித்ததில் மகிழ்ச்சி.

திலக் ஜானக மாரபன -

எனக்கும் பதவி கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் உறுதியான நிலையான செய்பாடுகளை முன்னெடுப்போம்.

1 comment:

  1. This is the 1st round, I think there will be 2nd and 3rd change Soon....,

    ReplyDelete

Powered by Blogger.