Header Ads



தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலை, இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரானதாக பார்க்கக்கூடாது - டிரம்ப்

சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அங்கு நடைபெற்ற மாநாட்டில் பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு டிரம்ப் முதல் வெளிநாடு பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற அரேப் – இஸ்லாம் – அமெரிக்க கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய டிரம்ப், எந்த ஒரு நாடும் தீவிரவாத குழுக்களுக்கு இருப்பிடமாக செயல்படக் கூடாது என்று தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் என்பது நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடைபெறும் போர் என்று கூறிய டிரம்ப், அதனை மேற்கு உலக நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் போராக பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு எனவும் டிரம்ப் மாநாட்டில் பேசினார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு டிரம்ப் எதிரானவர் என கூறப்பட்டு வரும் நிலையில், தனது முதல் பயணமாக இஸ்லாமிய நாடான சவுதிக்கு சென்று டிரம்ப் உரையாற்றியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

3 comments:

  1. Note the point:
    டிரம்ப் இங்கு சொல்லியுள்ளார் "இந்தியா தீவிரவாத்த்தால் மிகவும் பாதிக்கபட்ட நாடு"

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன ஆச்சரியம். காவித்தீவிரவாதியைத் தலைமையாக இந்திய நாடு தீவிர வாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தெளிவாக குறிப்பிடுகிறார். வினை விதைத்தவன் வினையறுப்பான்.

      Delete
  2. @ajan statement proves that he can never be faithful to Sri Lanka. He is more of Indian a... wiper than a neutral Sri Lankan. That's why Sinhalese never believe these Christian Tamil will do any good to Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.