Header Ads



இலங்கை வருவதற்காக, சவூதி அரேபியாவில் பொய் கூறப்பட்டதா..?


சவூதி அரேபியாவில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பணிப் பெண் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

தம்புள்ளை பகுதியிலிருந்து பணிப் பெண்ணாகச் சென்ற இந்திரகாந்தி, பலவந்தமாக முதலாளியால் தடுத்து வைக்கபட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே,குறித்த பெண் இன்று -31- காலை நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சவூதி தாரீஹா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில்,

குறித்த பெண் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு பொய்யான தகவலை கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சவூதி அரசுக்கோ அல்லது சவூதி மக்களுக்கோ எதிராக பொய்யான கருத்துக்களை எவராவது பரப்பினால் அது குற்றமாக கருதி தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை தூதரகத்திற்கு சவூதி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

5 முதல் 20 வருடம் வரையில் சிறைத்தண்டனை அல்லது 10 மில்லியன் சவூதி ரியால் அபராத தொகையாக விதிக்கப்படும் எனவும் சவூதி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும்,குறித்த இலங்கைப் பெண், 2 வருட ஒப்பந்தத்தில் 2015ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாகச் சென்றுள்ளார். அவரின் ஒப்பந்த காலம் இந்த வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

ஆனால், அவரது முதலாளி 2 மாதங்களுக்கு அதிகமாக பல அழுத்தங்கள் கொடுத்து குறித்த பெண்ணை தடுத்து வைத்துள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.