Header Ads



மகிந்த பல கூட்டங்களை நடத்துகிற போதிலும் தேர்தலில் தோல்வியடைந்தவரே

தொழிற்சங்க உரிமைகளுக்காக மக்களின் இயல்பு வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது என பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச வெசாக் வைபவம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்த இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுப்பது மற்றும் மக்களின் அடிப்படை உரிமை ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பான பொறுப்பு அரசாங்கத்திற்குரியது.

இதனால், இரண்டு கோடி மக்களின் சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், நீர் விநியோகம் என்பன இல்லாமல் மக்களை தவிக்க வைக்க முடியாது என்பதால் மக்களை நினைத்து ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை காலிமுகத்திடல் மே தினக் கூட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மகிந்த ராஜபக்ச பல கூட்டங்களை நடத்தியிருந்த போதிலும் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் இதனை சரியாக அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஜனாதிபதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டி தேர்தலை நடத்த விருப்பமான திகதியை அறிவிக்குமாறு தெரியப்படுத்தஉள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.