Header Ads



ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள, விசேட அறிக்கை..!

எமது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை வடி­வ­மைத்த முன்­னோர்கள் சமூ­கத்­துக்கு நல்­ல­தையே செய்­தி­ருக்­கி­றார்கள். இச் சட்­டத்தில் ஷரீ­ஆ­வுக்கு முர­ணற்ற சில திருத்­தங்கள் அவ­சியம் என்­பதில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உடன்­ப­டு­கி­றது. இதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­விற்கு உலமா சபை தனது கருத்­து­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் வழங்­கி­யுள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தை அமுல் நடத்தும் காதி நீதி­மன்ற நடை­மு­றை­யிலும் திருத்­தங்கள் கொண்டு வரப்­பட வேண்டும். காதி நீதி­ப­தி­க­ளுக்கு உரிய அந்­தஸ்து, நியா­ய­மான கொடுப்­ப­ன­வுகள், வச­திகள் என்­பன வழங்­கப்­பட வேண்டும். காதி நீதி­மன்ற முறைமை பலப்­ப­டுத்­தப்­பட்டால் மாத்­தி­ரமே சமூகம் உரிய பயன்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இச் சட்­டத்தில் காலத்­துக்­கேற்ப சில திருத்­தங்கள் சிபா­ரிசு செய்­யப்­பட வேண்டும் என்­பதில் உலமா சபை உறு­தி­யாக இருக்­கி­றது. இதே­வேளை , இச் சட்டம் தொடர்பில் மக்கள் தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே சட்டம் தொடர்பில் மக்கள் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை எதிர்ப்­ப­தாக சிலர் தவ­றான கருத்­து­களை வெளி­யி­டு­வது நல்­ல­தல்ல. பெண்­க­ளு­டைய விவ­கா­ரத்தில் காணப்­படும் குறை­பா­டு­களை உலமா சபை கேட்கத் தயா­ராக இல்லை என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது முற்­றிலும் தவ­றான குற்­றச்­சாட்­டாகும்.

பெண்கள் விவ­கா­ரத்தில் உலமா சபை கரி­ச­னை­யு­டனே செயற்­பட்டு வரு­கி­றது. அவர்­க­ளது பிரச்­சி­னை­களை செவி­ம­டுத்து அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு எப்­போதும் தயா­ரா­கவே உள்­ளது. சட்­டத்­தி­ருத்த சிபா­ரிசு குழுவின் செயற்­பா­டு­க­ளுக்கு உரிய ஒத்­து­ழைப்பு வழங்கி வருகிறது.

பத்வாவில் காலம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்கள் மேற்கொள்ள முடியும் என்பதைப் போன்று இச் சட்டத்திலும் ஷரீஆவுக்குட்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ARA.Fareel

9 comments:

  1. They need some more sound knowledge...this so called Islamic groups and ACJU are k8lling Muslim community ..Islamic groups milk Muslim community...while hundreds go hungry they milk communtiy...while people are in bad needs and can not meet date to date needs Islamic groups should consider these needs..
    Now Islamic groups is a fashion...dawa trips is luxury of life ...dawa workers need all facilties ..in western countries they charge a lot of money for talks..
    All mullah needs some lessons on this too

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
      (அல்குர்ஆன் : 4:59)

      Delete
  2. I would congratulate the ACJU for the bold stand that MMDA needs amendments. Simillarly, I hope ACJU will provide leadership to the effort to bring all Madrasas under one syllabus and accreditation system recognized by state. May Allah guide them.

    ReplyDelete
  3. What is the point bring under one umbrella...there are 10.000 Arabic colleges in Indian subcontinent all produce celreics like machines but see their productivity in this modern world..
    Arabic colleges need all change..
    It's syllabus..it's resources it's mission and vision..all from A to Z...

    ReplyDelete
  4. Yes Ateeq brother YOU ARE CORRECT

    ReplyDelete
  5. So ACJU should educate Muslims specially innocent Muslim women about the MMDA and the functioning of the Qazi courts. Only qualified persons should be appointed as Qazis. I agree with the comment by Peace that all Madrasas in the country should have only one syllabus. We are not talking about Madrasas in the sub continent but in Sri lanka.

    ReplyDelete
  6. உங்களது மாறறம் காலத்திறகெறறாற் போல் இல்லாமல்
    ஷரியா அடிப்படையில் அமைய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. காலத்திற்கேற்றால் போல் என அவர்கள் குறிப்பிடுவது ! இவைகளை தான் :

      காதி நீதிபதிகளுக்கு உரிய அந்தஸ்து, நியாய­மான கொடுப்பனவுகள்,
      வச­திகள் என்பன...

      ஷரீஆ சட்டத்தை அல்ல !!!

      Delete
  7. Srilanka Arabic colleges are copy cut of subcontinent. Imported one..may a few different...so there is no different between two system....one central syllabus...so it would be one more copy cut of old one ...it would need radical change

    ReplyDelete

Powered by Blogger.