Header Ads



அமெரிக்கா ஆயுத உதவி, துருக்கி எதிர்ப்பு

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் குர்து படையினருக்கு ஆயுதங்களையும், ராணுவ தளவாடங்களையும் வழங்கி உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அண்டை நாடான துருக்கியில் குர்து அமைப்பினர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், சிரியா குர்துகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சிரியாவிலும், இராக்கிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள், அந்தப் பகுதிகளில் 'மதப் பேரரசை' நிறுவியிருப்பதாக அறிவித்தனர். அந்தப் பேரரசின் தலைநகராக சிரியாவின் ரக்கா நகரம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்மைக் காலமாக இராக் ராணுவம், சிரியா ராணுவம் மற்றும் எதிரிப் படைகளிடம் தோல்வியைக் கண்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தங்கள் வசமிருந்த முக்கிய நகரங்களை இழந்தனர்.

தற்போது அவர்களது தலைநகராக அறிவிக்கப்பட்ட ரக்கா நகரை மீட்பதற்கு, குர்துப் படையினர் தயாராகி வருகின்றனர்.

அதையடுத்து, குர்துகளுக்கு உதவியளிப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை வழங்கப்போவதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

எனினும், அதன் நட்பு நாடான துருக்கி, இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. துருக்கியில் தனி நாடு கேட்டுப் போராடி வந்த குர்து அமைப்பினரை பயங்கரவாதிகளாக அந்த நாடு அறிவித்துள்ளது.

தற்போது அந்த அமைப்பு தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டு, கூடுதல் அதிகாரத்தை மட்டும் கோரி வந்தாலும், அந்த அமைப்பிலிருந்து பிரிந்த குழுக்கள் துருக்கியில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தக் குழுக்களுக்கு சிரியா குர்து படையினர் ஆதரவு அளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

இதன் காரணமாகவே, சிரியா குர்துகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவி அளிப்பதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

4 comments:

  1. கட்டாயம் கொடுத்தே ஆகுவான் காரணம் துருக்கியை துண்டாட வேண்டும் ,சீரழிக்கஸ வேண்டும் என்பதற்காக

    ReplyDelete
  2. YAHOODI PLANNED ALL ARAB COUNTRIES WILL CONTROL THEM.FINALLY MAHDI (ALAIHISALAM)Will start the JIHAAD AGAINNST YAHOODY INSHA ALLAH WE WILL DEFEAT THEM FINALLY.

    ReplyDelete
  3. YAHOODY DESTROYED OUR UNITY.
    WE ARE FIGHTING EACH OTHER AND FIGHTING FOR RELIGION.WE ARE DEVIDED BY GROUPS

    ReplyDelete
  4. சர்வாதிகாரி ஏர்துகான் தான் அடுத்த சதாம் குசைன் போலுள்ளது.

    சும்மா வாலை ஆட்டாமல் அடங்கி இருந்திருக்கலாம் தானே.

    ஏற்கனவே ISIS உட்பட பல முஸ்ஸிம் பயங்கரவாதிகளால் பல நாடுகளில் பிரச்சனைகள், இதற்குள் ஒரு முஸ்லிம் நாடு வாலாட்டுவதை USA/UK விரும்பாது.

    ReplyDelete

Powered by Blogger.