Header Ads



யாழ்ப்பாண மீலாத் விழா குழு, அமைச்சர் ஹலீமுடன் சந்திப்பு (படங்கள்)


யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் விழா தொடர்பில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஹலீமுடன் யாழ்ப்பாண மீலாத் விழா குழு, நேற்று வியாழக்கிழமை 4 ஆம் திகதி தபால் தொலைதொடர்புகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சில்  கலந்துரையாடலில் ஈடுபட்டது.

யாழ்ப்பாண மீலாத் விழா குழுத் தலைவர் டொக்டர் ரம்ஸி தலைமையிலான இக்குழு, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா குழு தொடர்பில் முக்கிய கலந்துரையாடலில்  ஈடுபட்டுள்ளதுடன் பல தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஹலீமுடன், அவரது பிரத்தியேகச் செயலாளர் பாஹிம்,  மற்றும் ரமீம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

யாழ்ப்பாண மீலாத் விழா குழு சார்பில் டொக்டர் ரம்ஸி தலைமையில் ஓய்வுபெற்ற முன்னாள் கல்விப் பணிப்பாளர் இனானு, வர்த்தகப் பிரமுகர் நியாஸ் ஹாஜியார், சமூக சேவையாளர் நவ்சாத், கணக்காளர் ஜான்சின், ஆசிரியர் அசீம், பஷீர் அஹ்மட், நஸ்ரூன், நஜாத், முஹ்சின் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.




2 comments:

  1. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தேசிய மீலாத் விழா யாழ். மண்ணில் நடைபெறவிருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது. ஏனைய மாவட்ட மீலாத் விழாக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட கூடுதலான நிதியை அரசு இதற்கு ஒதுக்கவேண்டும். ஏனெனில் இது யுத்தத்தாலும் இனரீதியாவும் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.