Header Ads



தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்புண்டு - ஹட்டன் கூட்டத்தில் மோடி

உலகின் மூன்றாவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை இருப்பதற்கு மலையக மக்களின் பங்களிப்பு முக்கியமானது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து, தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்தார். மேலும் கூறுகையில்,

தேயிலை தொழிலில் இலங்கை வளர்ச்சியடைந்திருப்பதற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தொழிலாளர்களாகிய நீங்களே எனவும் குறிப்பிட்டார்.

“உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கின்றது. தேயிலைக்கும் எனக்கும் ஓர் தனிப்பட்ட தொடர்பு உண்டு. 'சாய் பே சச்சா அல்லது தேனீருடனான கலந்துரையாடல்' என்பது ஒரு சுலோகம் மட்டும் அல்ல உழைப்பின் மீதான மரியாதையை குறிக்கின்றது” எனவும் குறிப்பிட்டார்.

உலகின் மிகப் பழமையான செம்மொழியான தமிழ் மொழியையும், சிங்கள மொழியையும் சரலமாக பேசுகின்றீர்கள். இது பெருமைக்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.