Header Ads



ஜனாதிபதியை ஆதரிக்கும் ஞானசாரர், பிரதமரை எதிர்க்கிறார்..!!

வெசாக் அலங்காரங்களுக்கு ஏமாந்து இலங்கையை இந்தியாவின் காலனியாக மாற்ற இடமளிக்கக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -08- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச வெசாக் விழாவுடன் அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள மத மேன்பாட்டை கண்டு அசந்து போகக் கூடாது. இது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துக்கான அறிகுறி.

அத்துடன் சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவது தொடர்பான விடயத்தை பல கோணங்களில் பார்க்க வேண்டும்.

இது திட்டமிட்ட செயற்பாடா என்ற சந்தேகம் தேசப்பற்றாளர்களுக்கு இருக்கின்றது.

மேலும் நாட்டில் ஏற்படும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் மக்கள் ஜனாதிபதி மீது குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் சகலவற்றையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே திட்டமிட்டு மேற்கொள்கின்றார் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இவன் ஐ தே க ஆள் அது மட்டுமல்ல ஐரோப்பா மற்றும் கனடா வின் பின்னணியில் செயல்பட்டவன்

    ReplyDelete
  2. All are political drama. Ranil is the director president is the producer.. this stupid is one of main actor... He is doing negative role.

    ReplyDelete

Powered by Blogger.