Header Ads



"முஹம்மத் சல்மான்" கடத்தல் சம்பவம் உணர்த்துவதென்ன..?


கம்­பளை பிர­தே­சத்­தி­லி­ருந்து இரண்­டரை வயது சிறு­வ­னொ­ருவன் கடந்த புதன் கிழமை கடத்திச் செல்­லப்­பட்ட சம்­பவம் நாட­ளா­விய ரீதியில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

எனினும் விசேட  நட­வ­டிக்­கையின் மூலம் குறித்த சிறு­வனை நேற்று முன்­தினம் பாது­காப்­பாக மீட்டு பொலிசார் பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். அந்த வகையில் பொலி­சாரி துரித நட­வ­டிக்கை பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும்.

குறித்த சிறு­வனைக் கடத்திச் சென்று ஒப்­ப­டைப்­ப­தற்­கான பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக அச் சிறு­வனின் மாமா முறை­யான நபர் ஒரு­வரே இருந்­துள்ளார். சிறு­வனின் தாய் குறித்த இளைஞர் மீதுள்ள நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே சிறு­வனை கொடுத்­த­னுப்ப, அவரோ பணத்­திற்­காக இந்தக் கடத்தல் நாட­கத்­திற்கு துணை போயுள்ளார்.

கிழக்கு மாகா­ணத்தின் முஸ்லிம் பிர­தேசம் ஒன்றைச் சேர்ந்த நபர்­களே இவ்­வாறு சிறு­வனைக் கடத்­து­வ­தற்­கான தூண்­டு­தலை வழங்­கி­யுள்­ள­மையும் பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. எனினும் என்ன நோக்­கத்­திற்­காக இவ்­வாறு சிறு­வனைக் கடத்­தினர் என்­பது இது­வரை அறி­யப்­ப­ட­வில்லை.

இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஐவர் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் இவர்­களில் மூவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வா­றான கடத்தல் சம்­ப­வங்கள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் அவ்­வப்­போது நடை­பெ­று­வது வழக்­க­மா­கி­விட்­டது. சில மாதங்­க­ளுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் வைத்து நான்கு வயது சிறுவன் ஒருவன் கடத்திச் செல்­லப்­பட்­டமை நாம் அறிந்­ததே. யாசகம் கேட்­பது போல் வீட்­டுக்குள் வந்த பெண் ஒரு­வரே அச் சிறு­வனை கடத்திச் சென்­றி­ருந்தார். பின்னர் சிறுவன் மீட்­கப்­பட்­ட­துடன் இந்­தியப் பிரஜை ஒருவர் உட்­பட மூவரை பொலிசார் கைது செய்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து நாம் படிப்­பினை பெற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். நமது குழந்­தைகள் நம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட அமா­னி­த­மாகும்.  அவர்­க­ளது பாது­காப்­புக்கு நாமே பொறுப்புச் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் நமது பிள்­ளை­களின் நட­மாட்­டங்­களை அணு அணு­வாக அவ­தா­னிக்க வேண்டும். குடும்­பத்­த­வர்கள் என்ற போதிலும் அதி­க­பட்ச நம்­பிக்­கையில் பிள்­ளை­களை யாரி­டமும் ஒப்­ப­டைப்­பதை பெற்றோர் தவிர்ந்து கொள்ள வேண்டும். அது­மாத்­தி­ர­மன்றி வீட்­டுக்கு வரும் அறி­மு­க­மற்ற நபர்­க­ளிடம் பிள்­ளை­களை நெருங்க அனு­ம­திப்­ப­தையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பணத்­துக்­காக எதையும் செய்­கின்ற மனி­தர்கள் அதி­க­ரித்­து­விட்ட இக் காலத்தில், விழிப்­பு­ணர்­வாக இருப்­பதன் மூலம் மாத்­தி­ரமே நமது பிள்­ளை­களை பாது­காக்க முடியும்.

அதே­போன்­றுதான் நெருங்­கிய உற­வி­னர்­களால்,  சொந்த வீட்­டுக்குள் வைத்தே சிறார்கள் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்ற சம்­ப­வங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

குழந்­தை­களை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­து­விட்டு தாய்மார் தொழி­லுக்­காக வெளி­நாடு செல்­வதும் இவ்­வா­றான துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்து விடுகின்றன. இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் 25 வீதமானவை உறவினர்களாலேயே இடம்பெறுகிறது என நீதியமைச்சின் அண்மைய அறிக்கை ஒன்றும் கூறுகிறது.

எனவேதான் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு விடயத்தில் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். 

-விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-

3 comments:

  1. perfect article to everyone

    ReplyDelete
  2. Whenever we try to talk the truth about our
    Muslims in Srilanka , many on this forum
    want to hear only GOOD about them . But in
    real life , they are either same as other
    non-Muslim communities or at times , even
    worst than them ! The question is , when
    are we going to understand this ? Why
    should it hurt when truth is spoken ?

    ReplyDelete
  3. Gampola pengaluku wekkamillama.perumaya pose kudukuranga.western kootam.oruthitaim olungana hijab thalailaim illa manadhilum illa.palla katikitu alaihidhuhal. Social type ana akal ellam

    ReplyDelete

Powered by Blogger.