May 07, 2017

மியன்மார் அகதிகளுக்கு, இலங்கை கரம் கொடுக்குமா..?

- அபூ ஆக்கில் - விடிவெள்ளி-

மியன்­மாரில் காணப்­படும் பெளத்த மேலா­திக்கச் சக்தி­களின் கடும்­போக்­குத்­த­னத்தால் அங்கு நீண்­ட­கா­ல­மாக கொதிப்பு நிலை காணப்­ப­டு­கின்­றது. மியன்மார் ராக்கைன் மாநி­லத்தில் வசிக்கும் ரோஹிங்யா இன முஸ்­லிம்­களை இலக்­கு­வைத்து, டைம்ஸ் சஞ்­சி­கை­யினால் பெளத்த தீவி­ர­வாதி என கூறப்­பட்ட அசின் விராது தேரர் தலை­மை­யி­லான கடும்­போக்கு அமைப்பு பல அட்­ட­கா­சங்­களை புரிந்து வரு­கின்­றது. பல முஸ்லிம் கிரா­மங்­களில் எரித்து அழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. முஸ்­லிம்கள் அடித்தும் எரித்தும் வெட்­டியும் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­ன்­றனர். மட்­டு­மன்றி, சொந்த இடங்­க­ளி­லி­ருந்து அடித்து துரத்­தப்­பட்­டுள்­ளனர். பலர் சொந்த நாட்­டுக்குள் அகதி முகாம்களுக்குள் முடக்­கப்­பட்­டுள்­ளனர். 

ரோஹிங்யா முஸ்­லிம்கள் அங்கு இடம்­பெறும் அட்­டூழி­யங்­க­ளி­லி­ருந்து தப்­பித்­துக்­கொள்ள சொந்த இடங்­க­ளி­லி­ருந்து தப்பி வேறு நாடு­க­ளுக்கு அக­தி­க­ளாக சென்­று­கொண்­டி­ருக்­கி­ன்­றனர். குறிப்­பாக பங்­க­ளாதேஷ் வழி­யாக இந்­தியா, இலங்கை ஆகிய நாடு­க­ளுக்கும் இந்­தோ­னே­ஷியா மற்றும் மலே­சியா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளிலும் தஞ்சம் புகுந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். 
கடல்­மார்க்­க­மாக மிகவும் ஆபத்­தான பயணம் மேற்­கொள்­கின்­ற­மையால் அண்­மைக்­கா­ல­மாக பல நூறு உயிர்­களும் காவு­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு கடல்­மார்க்­க­மாக மியன்­மா­ரி­லி­ருந்து வெளி­யேறி வந்த மக்கள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்கை கடற்­ப­ரப்பில் ஆபத்­தான நிலையில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருந்த நிலையில் கடற்­ப­டை­யி­னரால் காப்­பாற்­றப்­பட்­டனர். 

அவர்கள் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு கடல்­மார்க்­க­மாக சிறிய ரக பட­கொன்றில் செல்­லும்­போது இலங்­கைக்கு வடக்கே இந்­திய இலங்கை கடல் எல்­லையில் அப்­ப­டகு மூழ்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பின்னர் அவர்­களை இந்­திய மீன­வர்கள் காப்­பாற்றி தமது படகில் ஏற்­றிச்­சென்­ற­போது அவர்கள் திசை மாறி இலங்கைக் கடற்­ப­ரப்­புக்குள் வந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

பின்னர் அவர்கள் இலங்கை கட­லோர காவல் படை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டனர். 30 மியன்மார்  அக­தி­களில் 7 பெண்கள் 7ஆண்கள் மற்றும் 16 சிறு­வர்கள் அடங்­கு­கின்­றனர். மேலும்  இரு இந்­தி­யர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். 

கடந்த 5 வரு­டங்­க­ளாக இந்­தி­யாவில் தங்­கி­யி­ருந்த எமக்கு எந்­த­வொரு சலு­கை­களும் கிடைக்­க­வில்லை என தெரி­விக்கும் மியன்மார் முஸ்லிம் அக­திகள், மீண்டும் மியன்­மா­ருக்கு செல்­வ­தற்கு விரும்­ப­வில்லை எனவும், அவ்­வாறு சென்றால் தங்­க­ளது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட நேரிடும் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, குறித்த 30 மியன்மார் நாட்டை சேர்ந்த முஸ்லிம் மக்­களும் கடந்த 2012ஆம் ஆண்டு அங்கு காணப்­பட்ட இன ஒடுக்குமுறை கார­ண­மாக புக­லிடம் கோரி இந்­தி­யா­விற்கு சென்­றி­ருந்­தனர். இதன்­போது டில்­லியில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இவர்கள் அங்கு வழக்கு இடம்­பெற்று அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு  வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் புக­லிடம் கோரியே அவுஸ்­தி­ரே­லியா செல்லும் வழியில் இலங்கை கடல் எல்­லைக்குள் நுழைந்­துள்­ளனர். இதன்­போது விபத்தில் சிக்­கிய நிலையில் மியன்மார் அக­திகள் இலங்கை கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்டு கைது செய்­­யப்­பட்­டனர்.

இந் நிலையில் கைது செய்­யப்பட்ட அக­திகள் கடற்­படை வைத்­தி­யர்­களால்  பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­துடன்  அவர்­களை காங்­கேசன் துறை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­தனர்.

கைது செய்­யப்­பட்ட 32 பேரும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காங்­கே­சன்­துறை பொலி­ஸா­ரினால்  மல்­லாகம் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். பின்னர் அவர்­களை இம்­மாதம் 02 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார். அத்­துடன் அவர்கள் யாழ். சிறைச்­சா­லைக்கு மாறப்­பட்டு அங்கு இரு மண்­ட­பங்­களில் தங்க வைக்­கப்­பட்­டனர். 

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த அவர்கள் கடந்த செவ்­வா­யன்று மீண்டும் யாழ். மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். பிற­நாட்டில்  குடி­பு­குதல் சட்டம்,  பிரிவு 45Cயின்  கீழ்  யாழ்ப்­பாணம்  பொலிஸார்  இவர்­களை  நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தினர்.  ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் சார்பில் ஆஜ­ரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்­டத்­த­ர­ணிகள் ருஷ்தி ஹபீப் மற்றும் சைனாஸ் மொஹமட் ஆகியோர் அக­தி­களை அவர்­க­ளது நாட்­டிற்குத் திருப்­பி­ய­னுப்­ப­வேண்­டா­மென  நீதி­ப­தியை வேண்டிக் கொண்­டனர். 

அக­தி­களை யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் (UNHCR) கண்­கா­ணிப்பு  மற்றும் உத­வி­களின் கீழ் தடுப்பு முகாமில் வைப்­ப­தற்கு  சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னை­களை உட­ன­டி­யாக  பெற்­றுக்­கொள்­ளும்­படி நீதிவான் பொலி­ஸா­ருக்கு  உத்­த­ர­விட்டார்.  ஆர்.ஆர்.ரி.அமைப்பு நீதி­வா­னிடம் விடுத்த  வேண்­டு­கோ­ளை­ய­டுத்து,  நீதிவான் அவர்­களை சிறைக்கு  அனுப்­பாது  மிரி­ஹான  தடுப்­புக்­காவல் முகா­முக்கு  அனுப்பி வைக்க உத்­த­ரவு வழங்­கினார். அக­தி­க­ளுக்கு  முழு­மை­யான வைத்­திய வச­தி­களை வழங்­கு­மாறும், குறிப்­பாக கர்ப்­பி­ணித்­தாய்க்கு  இந்த வச­திகள் வழங்­கப்­பட வேண்டும் எனவும் நீதிவான் பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்தார்.  சட்­டத்­த­ர­ணி­களின் கோரிக்­கைக்கு அமைய அவர்கள் மிரி­ஹான முகா­முக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, மிரி­ஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் முஸ்­லிம்கள் 30 பேரை அக­தி­க­ளாக ஏற்­றுக்­கொள்­வது குறித்து, அகதிகளுக்கான ஐக்­கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் காரி­யா­லயம் விரி­வான அறிக்­கையை கோரி­யுள்­ளது. குறித்த அக­திகள் தொடர்பில் தர­வு­களை திரட்டி வரு­வ­தா­கவும் வெளி­வி­வ­கார அமைச்சு தெரி­விக்­கின்­றது.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறும் தரு­ணத்தில் குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் அறி­வு­ரை­க­ளையும் பெற்­றுக்­கொண்டு அவர்கள் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றது வெளிவி­வ­கார அமைச்சு. அத்துடன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் ஆலோசனை கிடைக்கும்வரை மியன்மார் அகதிகள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க காத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் ஒலுவில் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் 2013 ஆம் ஆண்டு 88 மியன்மார் அகதிகளை கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர். இதுவரை 2013 ஆம் ஆண்டிலிருந்து 268 படகு மூலம் சட்ட விரோதமாக குடியேற முயன்ற குடியேற்றவாசிகளான அகதிகளை கடற்படையினர் காப்பாற்றியுள்ள நிலையில் அவர்களில் 45 வீதமானோர் மியன்மார் நாட்டை சேர்ந்த ரோஹிங்யா இன முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 கருத்துரைகள்:

First of all Sri Lanka should learn a lot from this..Sri Lanka is not part of 1954 convention on Referees..Sri Lanka has no hisotry of sheltering anylon asylum seekers so far ...it can be first of its kind..Sri Lanka can amend it's immigration laws to support people like this on humanitarian ground.or seek international help to shelter them in SL...it should seek advice of UN refugees council..alternatively it should approach some countries that provide help for refugees

Post a Comment