May 11, 2017

"ஞானசாரரை கைதுசெய் - ஜனாதிபதி அமைதி காக்­கக்­கூ­டாது.."

'முஸ்­லிம்கள் அடிப்­ப­டை­வா­திகள், இலங்­கையை ஆக்­கி­ர­மிப்­ப­தற்கு முயற்­சித்து வரு­கி­றார்கள். எங்­க­ளது காணி­களை அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். முஸ்­லிம்­களை இந்­நாட்­டி­லி­ருந்தும் சவூ­திக்கு வெளி­யேற்ற வேண்டும்' என்று பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் கருத்­து­களை வெளி­யிட்டு நாட்டில் ஓர் இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிக்­கிறார். எனவே அவர் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­பரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்­துள்ளார். 

பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் ஊடக மாநாட்டில் தெரி­வித்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துகள் தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை சமூ­கத்­துடன் மாத்­தி­ர­மல்­லாது ஏனைய சமூ­கத்­தி­ன­ரு­டனும் நல்­லு­ற­வுடன் வாழ்­ப­வர்கள். வெசாக் நிகழ்­வு­க­ளிலும் அன்­ன­தா­னங்­களை பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் இணைந்து நாட்டின் பல பகு­தி­களில் ஏற்­பாடு செய்­துள்­ளார்கள். 

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்­காமர் ஐ.நாடுகள் சபையில் அன்று விடுத்த வேண்­டு­கோ­ளை­ய­டுத்தே ஐ.நாடுகள் சபையின் மேற்­பார்­வையின் கீழ் இவ்­வ­ருடம் இலங்­கையில் சர்­வ­தேச வெசாக் நிகழ்வு கொண்­டா­டப்­ப­டு­கி­றது. இந்­தியப் பிர­த­மரும் நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொள்­கிறார். சிறு­பான்மை இனத்­தவர் ஒருவர் விடுத்த கோரிக்­கையை அடுத்தே சர்­வ­தேச வெசாக் நிகழ்வு நடை­பெ­று­கி­றது. 

இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும் தேசிய ஒரு­மைப்­பாடும் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் ஞான­சார தேரர் நாட்டில் இன­மு­று­கல்­களை உரு­வாக்க முயற்­சிப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல வழக்­குகள் உள்­ளன. பெரும்­பா­லான வழக்­குகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்­ட­மைக்­காக தொட­ரப்­பட்­ட­ன­வாகும்.

ஞான­சார தேரர் விட­யத்தில் ஜனா­தி­பதி அமைதி காக்­கக்­கூ­டாது.

இனவாதத்தை தூண்டி நாட்டில் அழிவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பௌத்த தேரர்கள் என்றாலும் கருணை காட்டக்கூடாது. அவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

6 கருத்துரைகள்:

He uses him as your master did ?
What is the difference between two ?
Nothing but politics of opportunity...
So your talk is nothing...what you dream is to come back to politics at any cost to your community..
Think you will live another 10 or 20 years if Allah give you time...when you die you will be asked about your duty to your Deen and community...keep sincerity in your heart not poltics ..it would come with you when you die ..
Think what you were before you came into politics ...nothing but bloody reporter to some news papers Peremadasa gave you some chances ...now you talks about MR ...this shows how you changed your politics

இலங்கையில் குற்றவியல் சட்டம் அப்பாவிகளுக்கு மட்டுமே சமூகத்தை சீரழிப்பவர்களையும் ,கொலைகாரர்களை ,இனத்துவேசக்காரர்களையும் ,கொடிய கல்வர்களையும் அந்த சட்டத்தில் இருந்து விடுதலை பெற்று விடுவார்கள்.

Ohhh...
intha Ghana saara enna SLTJ Raazika...avvalavu easiyaaha arrest panna..?
SLTJ nadathiya oru saatharanamana koottathukkum Muslim makkalin urimayayi paathuhaakavum kural eluppi athanaal kaithu seiyya patta pothu enge poneergal Azvar...? enge poneergal intha ummaatthu vaaaluhal...? Enge poneergal intha ummaathu arasiyal kaavadigal..?
Enge poneergal intha ummatthu pachchonthigal..?
Enge poneergal intha ummathu Muslim amaippugal..?
Enge poneergal intha ummathu Muslim mediaakkal...?
Appo vitta thavaraal, Kaalppunarchiyaal ippo mottha samoogamum anupavippathai ippothuthaan ungal kangalukku pattatho...?
Intha samooham inavaathigalaal nalinthu naasamaahi ponaalthaan ungalukku enna.....?
Ellame political vesham panaththukkaana vesham...
Mahinda kaalathilum nadanthathu...ippavum thodargirathu...!!!!!

Avana harash panninaal unga mahinda rajapaksa kuutam benifit edduppanga.eenna yahapalana URUPOADIYA KAITHU SEYYA MAATANUNGA.ATHUTHAN KAMBA EDUTTHAWAN ELLAM VETTA KARAN AAHITTAN NAMMA NAATULA.PREMADASA MMRI NAALUPENA POOTAL ELLAM SARI WARUM.ILLA INDHA NAADU URUPPADATHU

You Guys are deleting comments _ Why???????????????? In Justice buddy

Post a Comment