Header Ads



சிறுநீரகங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கை பெண் மீட்பு

சிறுநீரகங்களை கேட்டு தொழில்தருநரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பணிப்பெண், றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நேற்று (23) தெரிவித்தது.

தம்புள்ளை, கந்தலம பிரதேசத்தைச் சேர்ந்த டபிள்யூ.டபிள்யூ.இந்தராகாந்தி என்பவரும் அவருடைய தொழில்தருநரும், றியாத்திலுள்ள டிறியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக, அழைக்கப்பட்டிருந்தனர்.

றியாத்திலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி. இலங்ககோன் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை நடத்தினார் என்றும் பணியகம் தெரிவித்தது.

குறித்த பெண், இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு, பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததன் பின்னரும் 2 மாதங்களாக, வலுக்கட்டாயமாக அவரை, தொழில்தருநர் தடுத்து வைத்துள்ளார் என, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய மனைவிக்கு, சிறுநீரகமொன்றைத் தானமாக வழங்குமாறு கோரியே, அவர் வற்புறுத்தப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.