Header Ads



எனக்கு வெட்கமாக இருந்தது..!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். முகாம் அமைத்து பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அங்கு அமெரிக்க விமானப் படையின் போர் விமானம் மிகப்பெரிய 10 டன் எடையுள்ள குண்டு வீசியது.

இது அணுகுண்டு அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. ‘ஜிபியூ-43’ என்ற அக்குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ (மதர் ஆப் ஆல் பாம்ஸ்) என அமெரிக்கா பெயரிட்டது.

இதற்கு போப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாடிகனில் மாணவர்கள் மத்தியில் இவர் பேசினார். அப்போது, “ஆப்கானிஸ்தானில் வீசிய குண்டுக்கு ‘தாஸ் குண்டு’ என அமெரிக்கா பெயர் சூட்டியுள்ளது.

அந்த பெயரை கேட்ட போது எனக்கு வெட்கமாக இருந்தது. குற்ற உணர்வு ஏற்பட்டது. தாஸ் என்பவள் ஒரு உயிரை அளிப்பவள். ஆனால் இக்குண்டு உயிரை அழிக்கவல்லது. அப்படி இருக்கும்போது இந்த குண்டுக்கு தாயின் பெயர் வைப்பது எந்த வகையில் சாத்தியம் என தெரியவில்லை” என்றார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற 25-ந்தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சை சந்திக்க இருக்கிறார். அப்போது குடியுரிமை கொள்கை, அகதிகள் கொள்கை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அமெரிக்காவின் முடிவுகளுக்கு போப் ஆண்டவர் எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.